ராணாவுடன் காதலா? த்ரிஷா கோபம்!!!

Friday,9th of November 2012
சென்னை::ராணாவை காதலிப்பதாக எழுதுவதா என்று மீடியாக்கள் மீது பாய்ந்திருக்கிறார் த்ரிஷா. த்ரிஷாவும், டோலிவுட் நடிகர் ராணாவும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் இருவரும் பல்வேறு இடங்களுக்கு ஜோடியாக சென்றனர். வெளிநாடுக்கும் சென்றிருக்கிறார்கள். இதையடுத்து இருவரும் காதலிக்கிறார்கள். விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளனர் என்று திரையுலகில் கிசுகிசு பரவியது. இதை த்ரிஷா மறுத்து வந்தாலும் இருவரின் நட்பும் தொடர்ந்தது. சமீபத்தில் த்ரிஷாவின் தந்தை காலமானார். த்ரிஷாவுடன் நடித்த நடிகர்கள் யாரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தவில்லை. ராணா மட்டும் நேரில் வந்து ஆறுதல் கூறியதுடன் இறுதி சடங்கு நடக்கும் வரை உடனிருந்தார்.

இதை தொடர்புபடுத்தி செய்திகள் வெளியாகின. இதை பார்த்து த்ரிஷா கோபம் அடைந்தார். ‘எனக்கும் ராணாவுக்கும் நட்பு தான் உண்டு. என்னைப்பற்றி அவருக்கு எல்லாம் தெரியும். 10 வருடமாக இருவரும் பழகி வருகிறோம். வேறு எந்த உறவும் இல்லை. இதை பலமுறை சொல்லியும் மீண்டும் மீண்டும் காதலிப்பதாக மீடியாக்களில் எழுதுகிறார்கள். இதை நிறுத்திக்கொள்ள வேண்டும்’ என்று த்ரிஷா பொங்கி இருக்கிறார். த்ரிஷாவுடனான காதல் கிசுகிசுக்கு பதில் அளிக்காமல் இருந்த ராணா தற்போது பதில் அளித்தார். ‘நாங்கள் காதலிப்பதாக இதுவரை சொல்லவில்லை. எனவே இருவரையும் இணைத்து எழுத வேண்டாம்’ என்றார்.

Comments