நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு செவாலியே விருது!!!

Friday,2nd of November 2012
மும்பை::பிரபல இந்திய நடிகையும், முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராக்கு பிரான்ஸ் நாட்டின் இரண்டாவது உயரிய விருதான செவாலியே விருது வழங்கப்பட்டுள்ளது.

1994ஆம் ஆண்டு நடந்த உலக அழகிப் போட்டியில் உலக அழகியாக பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய், பின்னர் தமிழ், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களில் நடித்து பிரபல நடிகையாகவும் வலம் வந்த அவர், இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வந்த ஐஸ்வர்யா, கர்ப்பமாணதும் நடிப்புக்கு சிறுது காலம் ஓய்வு கொடுத்திருக்கிறார். தற்போது அழகான பெண் குழந்தையை பெற்றிருக்கும் அவர் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தன்னை தயார் படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் அவருடைய கலை சேவையை பாராட்டி பிரான்ஸ் நாட்டின் இரண்டாம் உயரிய விருதாக கருதப்படும் செவாலியே விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. நேற்று (நவ.1) தனது 39வது பிறந்தநாளை கொண்டாடிய ஐஸ்வர்யா ராய்க்கு அந்த பிறந்தநாள் விழாவிலே இந்த விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்திய நாட்டுக்கான பிரான்ஸ் தூதர் பிரான்கோயிஸ் ரிச்சயர் இந்த விருதை ஐஸ்வர்யா ராய்க்கு வழங்கினார்.

விருது பெற்ற ஐஸ்வர்யா ராய், "இந்த விருது தனக்கு கிடைத்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இப்படியொரு உயரிய விருதை கொடுத்து கெளரவித்த பிரான்ஸ் அரசுக்கு தமது நன்றிகள். என்று தெரிவித்தார்.

Comments

  1. wow

    http://tamils.com/picture-gallery/category/1443-shruthi.html

    ReplyDelete

Post a Comment