Thursday,1st of November 2012
சென்னை::நடிகர் பிரசாந்த் - கிரகலட்சுமி சமரசம் செய்து கொள்ள உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. இதையடுத்து இருவரும் மீண்டும் தங்கள் வாழ்க்கையை புதுப்பிக்க உள்ளனர்.
நடிகர் பிரசாந்த் தனது மனைவி கிரகலட்சுமிஇ தன்னை ஏமாற்றி 2வது திருமணம் செய்து கொண்டதாகவும்இ அதன் பின்னர் பணம் கேட்டு மிரட்டியதாகவும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தார். அதன் பின்னர் விவாகரத்து கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் பிரசாந்த் - கிரகலட்சுமிக்கு விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் கிரகலட்சுமி மேல்முறையீடு செய்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம்இ கிரகலட்சுமி மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் கிரகலட்சுமி மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போதுஇ சென்னை உயர் நீதிமன்றம் தவறாக விவாகரத்து கொடுத்து விட்டது என்று கிரகலட்சுமி வழக்கறிஞர் வாதிட்டார்.
இதைத் தொடர்ந்துஇ இந்த வழக்கில் சமரசம் செய்து கொள்ள வாய்ப்பு உள்ளதா என்று பிரசாந்திடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது பதில் அளித்த பிரசாந்த் தரப்பு வழக்கறிஞர்இ சமரசத்துக்கு முயற்சி செய்வதாக கூறினார்.
இதே கருத்தையும் கிரகலட்சுமி வழக்கறிஞரும் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதைத் தொடர்ந்துஇ இருவரும் சமரசம் செய்து கொண்டால் கிரிமினல் வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று கூறினர்.
மேலும்இ பிரசாந்தும்இ கிரகலட்சுமியும் சமரசம் செய்து கொண்ட விவரத்தை நீதிமன்றத்தில் வரும் 27ஆம் தேதி தெரிவிக்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள் வழக்கை தள்ளிவைத்தனர்.
Comments
Post a Comment