திஷா பாண்டே படத்துக்கு உல்டா ஷூட்டிங்!!!

Saturday,17th of November 2012
சென்னை::திஷா பாண்டே நடிக்கும் படத்தின், ஒரு பாடல் காட்சி மட்டும் தமிழ் நாட்டில் படமாக்கப்பட்டது.இதேஷ், திஷா பாண்டே நடிக்கும் படம் ‘சிக்கி முக்கி’. எழுதி இயக்குகிறார் ஸ்ரீகந்தராஜா. இவர் கூறியதாவது:‘என்னவோ பிடிச்சிருக்கு’, ‘எழுதியது யாரடி’ போன்ற படங்களை தயாரித்துள்ளேன். இப்படம் மூலம் இயக்குனராகி உள்ளேன். காதலுடன் சஸ்பென்ஸ் கலந்த கதையாக இது உருவாகிறது. வழக்கமாக கோலிவுட் படங்களுக்கு பெரும்பாலும் தமிழ்நாட்டில் ஷூட்டிங் நடக்கும். ஒன்று அல்லது 2 பாடல் காட்சிக்கு மட்டும் வெளிநாடுகளுக்கு செல்வதுண்டு. ‘சிக்கி முக்கி’ படத்தை பொறுத்தவரை இது உல்டாவாக நடந்துள்ளது. இதன் ஷூட்டிங் பெரும்பகுதி மலேசியாவில் நடந்தது. ஒரேயொரு பாடல் காட்சி மட்டும் சென்னையில் படமாக்கப்பட்டது. இதேஷ், திஷா பாண்டே ஜோடியுடன் கஞ்சா கருப்பு, சூரி, நகுலன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். லியோ.டி ஒளிப்பதிவு. ராம்ஜி வசனம். கவுதம் இசை. செந்தில்குமார் தயாரிப்பு.இவ்வாறு ஸ்ரீகந்தராஜா கூறினார்.

Comments