Thursday,15th of November 2012
சென்னை::தோணி படத்தின் மூதல் தமிழ் திரையுலகில் அறிமுகமான ராதிகா ஆப்தேவுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. இவர் தனது காதலர் ராபர் என்பவரை மணக்கிறார்.
பெங்காலி, இந்தி மொழிப் படங்களில் நடித்து வந்த ராதிகா ஆப்தே, பிரகாஷ்ராஜ் நடித்து இயக்கிய 'தோணி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதற்கு முன்பு இந்தி மற்றும் தமிழில் வெளியான ரத்த சரித்திரம் படத்தில் இவர் நடித்திருந்தார்.
தற்போது 'வெற்றிச்செல்வன்' படத்தில் நாயகியாக நடித்து வரும் ராதிகா ஆப்தேவே, விரைவில் தனது காதலர் ராபர்ட் என்பவரை திருமணம் செய்துகொள்ளப் போகிறாராம்.
இது பற்றி கூறிய ராதிகா ஆப்தே, "எனக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளது. இது காதல் திருமணம் ஆகும். நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு லண்டனில் மேற்கத்திய இசையை கற்றுக்கொள்ள சென்றேன். அப்போது ராபர்ட் என்பவர் அறிமுகமானார். இருவரும் நண்பர்களாக பழகினோம். பிறகு எங்களுக்குள் காதல் மலர்ந்தது. ஐந்து வருடங்களாக காதலித்து வருகிறோம். ராபர்ட் தற்போது இசையமைப்பாளர் ஆகிவிட்டார். விரைவில் எங்கள் திருமணம் நடக்க உள்ளது." என்றார்.
Comments
Post a Comment