Friday,16th of November 2012
சென்னை::ஆர்யாவும், அஞ்சலியும் ‘சேட்டை’ படத்தில் இணைந்து நடிக்கின்றனர். கண்ணன் இயக்குகிறார்.
இந்த படத்தில் முத்த காட்சியொன்றில் இருவரும் நடித்து இருக்கிறார்கள். படப்பிடிப்பு குழுவினரை வெளியே அனுப்பி விட்டு இயக்குனர், ஒளிப்பதிவாளர் மட்டும் அருகில் இருந்து இக்காட்சியை எடுத்துள்ளார்.
முதலில் இதில் நடிக்க தயங்கிய அஞ்சலி வற்புறுத்தலுக்கு பிறகு ஒப்புக்கொண்டாராம். கமலைப்போல் அஞ்சலியை ஆர்யா முத்தமிட்டாராம். பழைய கமல் படங்களில் அவரது முத்தக்காட்சியை பார்த்து அந்த பாணியில் முத்தமிட்டு நடித்ததாக கூறப்படுகிறது.
இருவருக்கும் முதல் முத்தக்காட்சி படம் இதுவாகும். பல மணி நேரம் நிறைய ‘டேக்’ எடுத்து இந்த காட்சியை படமாக்கி உள்ளனர். முத்த காட்சியில் அஞ்சலி துணிச்சலாக நடித்துள்ளார். அவருடைய மற்ற படங்களிலும் இதுபோன்று முத்த காட்சியில் நடிக்குமாறு இயக்குனர்கள் வற்புறுத்துகிறார்களாம்.
Comments
Post a Comment