Wednesday,14th of November 2012
சென்னை::ஏ.ஆர்.ரகுமானுடன் பாடகர் சுக்விந்தர் சிங் கருத்து வேறுபாடு கொண்டதாகவும் இவர்கள் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளதாகவும் சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. தில் சே படத்தில் சைய்யா சைய்யா பாடல் (உயிரே படத்தில் இடம்பெறும் தக தைய்யா தைய்யா) மூலம் பிரபலமானவர் சுக்விந்தர் சிங். ரகுமானின் இசையில் தொடர்ந்து பல படங்களில் பாடினார். கடைசியாக ஸ்லம்டாக் மில்லினியர் படத்தில் ஆஸ்கர் விருது பெற்ற ஜெய் ஹோ பாடலை இவர் பாடியிருந்தார். அதன் பிறகு இருவரும் சேர்ந்து பணியாற்றவில்லை. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் இதனால் இவர்கள் பிரிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே போபாலில் நடந்த ரகுமானின் இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சுக்விந்தர் பாட்டு பாடினார்.
இது பற்றி சுக்விந்தர் கூறும்போது, எனக்கும் ரகுமானுக்கும் எந்த பிரச்னையும் இல்லை. சில வருடங்களாக அவரது இசையில் பாடாதது உண்மைதான். ஆனால் இப்போது அவரது நிகழ்ச்சியில் பாடியிருக்கிறேன்ÕÕ என்றார். போபால் இசை நிகழ்ச்சியில் சுக்விந்தர் பாட வேண்டிய பாடல்கள் நிறைய இருந்ததாம். இதனால் விழா குழுவினர்கள்தான் சுக்விந்தருக்கு அழைப்பு விடுத்ததாகவும் ரகுமான் அவரை அழைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
Comments
Post a Comment