ஜெய்க்கு ஜோடியான பிரபல இந்தி நடிகை யாமி கெளதம்!!!

Monday,19th of November 2012
சென்னை::சின்னத்திரை நடிகராக அறியப்பட்ட பிரேம் சாய், தற்போது பெரிய திரையில் இயக்குநராக அறிமுகமாகிறார். இவர் இயக்கும் 'தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும்' படத்தை இயக்குநர் கெளதம் மேனனின் போட்டான் கதாஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பே இப்படத்தின் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது. இருப்பினும் ஹீரோ ஜெய்க்கு சரியான ஜோடி கிடைக்காததால் இன்று வரை இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. முதலில் இப்படத்திற்கு அனன்யாவை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்தார்கள். பிறகு என்ன ஆனதோ, தற்போது அவரை மாற்றிவிட்டு பிரபல இந்தி நடிகையான யாமி கெளதமை ஜெய்க்கு ஜோடியாக்கி இருக்கிறார்கள்.

ஜெய், யாமி கெளதம் நடிக்க, இவர்களுடன் சந்தானம், விடிவி கணேஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள். பின்னணி பாடகர் கார்த்திக் இசையமைக்கும் இப்படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.

காதல், காமெடி, இசை என்று ஒரு ஜாலியான கமர்ஷியல் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் இறுதியில் தொடங்குகிறது.

Comments