Tuesday,13th of November 2012
சென்னை::தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று தென்னிந்திய மொழிப்படங்களிலும், மலேசிய மொழிப் படங்களிலும் ஹீரோயினாக பிஸியாக இருக்கும் மோனிகா, மலையாள திரையுலகிற்காக தனது பெயரை 'பார்வனா' என்று மாற்றிக்கொண்டார்.
மோனிகா நடித்திருக்கும் மலையாளப் படமான '916' நேற்று வெளியானது. ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் இப்படத்தில் மோனிகா மருத்துவக் கல்லூரி மாணவியாக நடித்திருக்கிறார்.
916 என்றால் சுத்தமான தங்கம் என்று பொருள், இப்படத்தின் கதையும் சுத்தமான தங்கத்தின் அளவுக்கு தரமான படமாம். 'கதைபறையும்', 'மணிகாளல்' ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய மோகனன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இவர் ஏற்கனவே இயக்கிய இரண்டுப் படங்களுக்கும் கேரள அரசின் விருதுகளை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கேரள சினிமாவின் மிகச் சிறந்த இயக்குநர்களில் ஒருவரானா மோகனன், படத்தில் நடித்திருப்பது தனக்கு மகிழ்ச்சியளிக்க கூடிய ஒன்று. என்று சொல்லும் மோனியா, ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்க நிறையப் படங்களில் நடிக்க வேண்டும் என்பதல்ல...சவாலான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்தாலே போதும். எனக்கு ரசிகர்களின் மனதில் நிரந்தரமாக நிலைத்து நிற்க ஆசை. அதைதான் செய்து கொண்டிருக்கிறேன். என்று தெரிவித்தார்.
இப்படத்தின் வெற்றியால் மலையாள சினிமாவில் மோனிகாவுக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் வருகின்றனவாம். அதனால் மலையாள சினிமாவுக்காக தனது பெயரை பார்வனா என்று மாற்றி வைத்துக்கொண்டிருக்கிறார்.
Comments
Post a Comment