Thursday,15th of November 2012
சென்னை::மனநிலை பாதித்த பெண்களை பாலியல் தொந்தரவு செய்யும் கதை ‘மாசி திருவிழா என்ற பெயரில் படமாகிறது. இதுபற்றி இயக்குனர் இ.கே.சேகர் கூறியதாவது: மனநிலை பாதித்த பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யும் அதிர்ச்சி தரும் சம்பவங்கள் அவ்வப் போது பத்திரிகைகளில் வெளியாகிறது. இது கொடுமையான விஷயம். இதை தடுக்க வேண்டும். இத்தகைய கதை அம்சத்துடன் மாசி திருவிழா கதை உருவாகி இருக்கிறது. மனநிலை பாதித்த தனது தாயை சிலர் பாலியல் ரீதியாக கொடுமைபடுத்துகின்றனர்.
அதை சிறுவயதில் காணும் மகன் மனதளவில் பாதிக்கப்படுகிறான். வளர்ந்தபின் மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு வாழ்வு தருகிறான். அவளையும் சிலர் பாலியல் ரீதியாக துன்புறுத்துகின்றனர். அவர்களை எப்படி பழிவாங்குகிறான் என்பதே கதை. விதுன், சதீஷ் ஹீரோ. பானுஸ்ரீ, பாலமீனா ஹீரோயின்கள். இவர்களுடன் சசி, பாலு, அருள்குமார், கலைகோமதி, தாஜ், வெங்கடேசன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சீனு ஆதித்யா ஒளிப்பதிவு. காந்திதாசன் இசை. ஜி.அருள்குமார், கே.சேகர் தயாரிப்பு. கோவை நாமக்கல் போன்ற இடங்களில் ஷூட்டிங் நடந்துள்ளது.
Comments
Post a Comment