கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!

Monday,5th of November 2012
சென்னை::முகமூடி’ படத்தை இயக்கிய மிஷ்கின் அடுத்து ‘இடி மின்னல் காதல்’ என்ற படம் இயக்க திட்டமிட்டிருக்கிறாராம்.

‘களவாணி’, ‘மெரினா’, ‘கலகலப்பு’ படத்தில் நடித்த ஓவியா அடுத்து ‘சில்லுனு ஒரு சந்திப்பு’, ‘மூடர் கூடம்’ படங்களில் நடித்தாலும் சொந்த ஊரான திருச்சூரிலிருந்து சென்னையில் குடியேறும் எண்ணம் இல்லையாம்.

சென்னையில் இருந்து ஐதராபாத்துக்கு ஹீரோ ஆதி விமானத்தில் சென்றபோது அதே விமானத்தில் இளையராஜாவும் வந்தாராம். அவருடன் கலந்துரையாடியபடி பறந்த அனுபவத்தை ஆதியால் மறக்க முடியாதாம்.

பாலிவுட் நடிகை வித்யா பாலன் பெங்களூர் இசை கல்லூரியில் கர்நாடக இசை கற்று தேர்ந்தவர்.

‘அவன் இவன்’ பட ஹீரோயின் ஜனனி ஐயர் மலையாளத்தில் ‘த்ரி டாட்ஸ்’ என்ற படத்தில் நடிக்கிறார்.

ஒரே ஹேர் ஸ்டைலில் நடித்து வந்த கார்த்தி, வெங்கட்பிரபு இயக்கும் ‘பிரியாணி’ படத்திற்காக புதுவித ஹேர் ஸ்டைலுக்கு மாறி இருக்கிறார். இந்த கெட்டப்புடன் சமீபத்தில் நடந்த போட்டோ ஷூட்டில் பங்கேற்றார்.

தனது தந்தை இறந்தபோது ஆறுதல் கூறியவர்களுக்கு டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்திருக்கும் த்ரிஷா மீண்டும் ஷூட்டிங்கில் கலந்துகொண்டார். ‘சமர்’ படத்துக்காக விஷாலுடன் பாடல் காட்சியில் நடிக்க மலேசியா புறப்பட்டு சென்றார்.

‘சேட்டை’ படத்துக்காக ஆர்யா, சந்தானம் பங்கேற்ற பைக் சேசிங் சண்டை காட்சியை டூப் போடாமல் பாதுகாப்பு அம்சங்களுடன் படமாக்கினார் இயக்குனர் கண்ணன்.

64 வயதாகும் பாலிவுட் ஹீரோயின் ஹேமமாலினி அழகு குறிப்புகள் பற்றி புத்தகம் எழுதுகிறார். அவரது சுயசரிதையை எழுத சில நிறுவனங்கள் அணுகி உள்ளன.

தமிழ் படங்களில் குத்தாட்டம் போட்ட மேக்னா நாயுடு ‘கல்யாண் கா சாமன்’ என்ற படம் மூலம் கன்னடத்தில் குத்தாட்ட நடிகையாக

அறிமுகமாகிறார்.

அஜீத் நடிக்க விஷ்ணுவர்தன் இயக்கும் பட ஷூட்டிங் மும்பையில் 70 நாட்கள் நடக்கிறது. இதில் நயன்தாரா, டாப்சி, ஆர்யா பங்கேற்கின்றனர்.

பாப்பின்ஸ் மலையாள படத்திற்காக சொந்த குரலில் பாட்டு பாடினார் நித்யா மேனன். ஏற்கனவே இரண்டு தெலுங்கு படங்களிலும் இவர் பாடி இருக்கிறார்.

ஆட்டோகிராப் படத்தில் சேரன் ஜோடியாக நடித்த மல்லிகா நீண்ட நாட்களுக்குபிறகு சென்னையில் ஒரு நாள் படத்தில் சேரன் ஜோடியாக நடிக்கிறார்.

அவள் பெயர் தமிழரசி பட இயக்குனர் மீரா கதிரவன் இயக்கும் புதிய படத்தில் வெங்கட் பிரபு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார்.

துப்பாக்கி படத்தில் விஜய் பாடியுள்ள கூகுல் கூகுல் யூ டியூபில் வெளியாகி இருக்கிறது.

Comments

  1. excellent


    http://tamils.com/picture-gallery/category/1445-vaishali.html

    ReplyDelete

Post a Comment