நல்ல படத்துக்கு காத்திருக்கிறேன் : பார்வதி ஓமனகுட்டன் பேட்டி!!!

Monday,19th of November 2012
சென்னை::மலையாள படங்களில் ஒரு காலத்தில் கதைக்கு பஞ்சம் இருந்தது என்றார் பார்வதி ஓமனகுட்டன். ‘பில்லா 2 படத்தில் நடித்தவர் பார்வதி ஓமனகுட்டன். அவர் கூறியதாவது: தமிழில் நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். மலையாளத்தில் இப்போது சாதகமான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. ஒரு காலத்தில் மலையாள படங்களின் கதைகள் மிகவும் வலுவாக இருந்தது.

அதே நேரம் ஒரு காலகட்டத்தில் கதைக்கு பஞ்சம் இருந்ததும் உண்டு. இப்போது மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஒருபோதும் நான் எதையும் திட்டமிட்டு செய்வது கிடையாது. நல்ல படங்கள் எப்போது வருகிறதோ அப்போது ஏற்க காத்திருக்கிறேன். அவசரமாக படங்களை ஒப்புக்கொள்ளமாட்டேன். மேலும் குறிப்பிட்ட மொழியில்தான் நடிப்பேன் என்று எந்த கட்டுப்பாடும் நான் வைத்துக்கொள்ள வில்லை. இவ்வாறு பார்வதி ஓமனகுட்டன் கூறினார்.

Comments