Thursday,1st of November 2012
சென்னை::காதலில் சொதப்புவது எப்படி படம் வெற்றி பெற்றபோதும், அதன்பிறகு அமலாபாலின் தமிழ் சினிமா மார்க்கெட் சொதப்பி விட்டது. அதனால் தெலுங்கு சினிமாவுக்கு சென்றார். அங்கு போன வேகத்திலேயே ராம்சரண்தேஜா, அல்லு அர்ஜூன் போன்ற நடிகர்களை அமலாவை அரவணைத்துக்கொண்டனர். அதனால் அதையடுத்து ஆந்திராவிலேயே செட்டிலான அமலாபாலை, சமுத்திரகனி தான் ஜெயம்ரவியைக்கொண்டு இயக்கி வரும் நிமிர்ந்து நில் படத்துக்காக தமிழுக்கு கூட்டி வந்தார்.
அதையடுத்து மீண்டும் தமிழில் நம்பிக்கையுடன் செயல்படத் தொடங்கினார் அமலாபால். இந்நிலையில் தற்போது ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்திலும் தற்போது கமிட்டாகி ஏகதெம்மில் மேல்தட்டு நாயகி என்கிற அங்கீகாரத்தை பெற்று விட்டார். அதனால் இனிமேல் முன்னணி நடிகர்களின் படங்களில் மட்டுமே நடிப்பேன் என்று கூறும் அமலாபால், இரண்டாம்தர நடிகர்களுடன் நடிப்பதில்லை என்ற கொள்கையை தற்போது கடைபிடிக்கத் தொடங்கியிருக்கிறார். மேலும், தெலுங்கு படங்களில் நடிப்பது போன்றே தமிழிலும் கூடுதல் கிளாமர் காட்டி நடிக்கவும் முடிவு செய்திருக்கிறார் நடிகை.
Comments
Post a Comment