Wednesday,7th of November 2012
சென்னை::குணச்சித்திர நடிகர் ஈ.வி.கணேஷ்பாபு இயக்கத்தில் புதுமுகங்கள் சத்யா, ஸ்ரீ ரம்யா நடித்திருக்கும் யமுனா படத்தின் ஆடியோ வெளியீட்டிற்காக சென்னை சத்யம் திரையரங்கம் வந்திருந்த நடிகை நமீதா, மேடை ஏறி மைக்கை பிடித்ததும், கூடியிருந்த ரசிகர்கள் கூட்டம் மச்சான்ஸ், மச்சான்ஸ்... என்றது., உடனே நமீதா இது எனக்கு பத்தாது மச்சான்களா இன்னும் பயங்கர சவுண்டாக பெரிதாக வேண்டும் என்றார். உடனே ஓ.... என ஆர்ப்பரித்த கூட்டத்தை பார்த்து ஐ லவ் யூ மச்சான்களே... என்று ஸ்வீட் கிஸ் எல்லாம் கொடுத்த நமீதா, நீண்டநாட்களுக்குப் பின் மச்சான்களை அதாங்க ரசிகர்களை பார்த்த உற்சாகத்தில் தன் விலையுர்ந்த செல்போனை மைக் மேடை அருகேயே விட்டு சென்றுவிட்டார். அதை அடுத்து பேச்சாளரை அறிவிக்க வந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் ராகவ் மகேஷ், பார்த்து எடுத்து நமீயின் காரியதரிசி ஜானிடம் கொடுத்து நமீயிடம் சேர்பித்தார். இந்த மேடையில்தான் தொகுப்பாளர் ராகவ், நமீக்கு அழகான பெண்களை பார்த்தால் "யாரடி நீ மோகினி" எனக் கேட்க தோன்றும், நமீதாவை பார்த்தால் "6 அடிய உயர மோகினி" என்று சொல்ல தோன்றும் என்று நமீக்கு "6அடி உயர மோகினி" எனும் பட்டமும் கொடுத்து வாழ்த்தினார் என்பது ஹைலைட்
wow
ReplyDeletehttp://tamils.com/picture-gallery/category/1486-gauri_munjal.html