3 மொழியிலும் கவனம் : காஜல் அகர்வால் முடிவு!!!

Tuesday,20th of November 2012
சென்னை::நடித்து வரும் 3 மொழிகளிலும் தொடர்ந்து கவனம் செலுத்துவேன் என்றார் காஜல் அகர்வால். விஜய்யுடன் நடித்த ‘துப்பாக்கி, இந்தியில் நடித்த ‘சிங்ஹம் மற்றும் டோலிவுட்டில் நடித்த படங்களுக்கு பின், தெலுங்கு, இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் காஜல். இந்தியில் அக்ஷய் குமாருடன் நடித்து வரும் புதிய படத்தை தவிர வேறு படங்களை ஏற்கவில்லை. அதே போல் டோலிவுட்டில் ஒரு படம் மட்டுமே நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். தமிழில் வரும் வாய்ப்புகளுக்கு சம்மதம் சொல்லாமல் மவுனம் காத்து வருகிறார்.

திடீரென சம்பளத்தை காஜல் உயர்த்தி கேட்பதால் தயாரிப்பாளர்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லையாம். இதனால் அவர் படங¢களை ஏற்க தயங்குவதாக சொல்லப்படுகிறது. புதிய படங்கள் ஒப்புக்கொள்ளாதது பற்றி அவரது தரப்பில் கூறும்போது, ‘ஒரு சில இயக்குனர்களுடன் கதைகள் கேட்டு வருகிறார் காஜல். இன்னும் ஒரு வாரத்துக்குள் பெரிய படமொன்றை ஒப்புக்கொள்ள உள்ளார். வரும் வாய்ப்புகள் எல்லாவற்றையும் ஒப்புக்கொள்ளும் எண்ணமில்லை. ஆனாலும் தொடர்ந்து 3 மொழிகளிலும் கவனம் செலுத்துவார் என்றனர்.

Comments