மணிரத்னம் இயக்கும் ‘கடல்’ படத்தின் ஒரு பாடல் 3-ந் தேதி வெளியீடு!!!

Thursday,1st of November 2012
சென்னை::மணிரத்னம் இயக்கும் ‘கடல்’ படத்தின் வேலைகள் சுறுசுறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இப்படத்தில் பழைய நடிகர் கார்த்திக்-ன் மகன் கௌதம், பழைய நடிகை ராதாவின் இரண்டாவது மகள் துளசி ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஆஸ்கார் புகழ் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

தமிழ் சினிமாவையும் தாண்டி உலக சினிமா ரசிகர்களும் ஏ.ஆர்.ரஹ்மானின் இந்த இசை ஆல்பத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், இப்படத்தில் இடம்பெறும் ‘நெஞ்சுக்குள்ளே’ என்ற ஒரு பாடலை மட்டும் வரும் 3-ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர்.

உலகம் முழுவதும் இருக்கும் ரசிகர்களுக்கு இந்த பாடலை ஒரே நேரத்தில் கொண்டு சேர்ப்பதற்காக எம்.டி.வி மூலம் வெளியிடவிருக்கிறார்கள். இதில் கூடுதல் சுவாரஸ்யம் என்னவென்றால், இந்த பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் நேரடியாகவே இசையமைக்க போகிறார். இந்த நிகழ்ச்சி வரும் 3-ம் தேதி இரவு 8 மணிக்கு எம்.டிவியில் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.
27-7-12_findyour_INNER_468x60.gif

Comments