15 வருடத்துக்கு பிறகு இசை ஆல்பம் : ரகுமான் தகவல்!!!

Monday,19th of November 2012
சென்னை::15 வருடத்துக்கு பிறகு இசை ஆல்பம் தயாரிக்க முடிவு செய்துள்ளார் ஏ.ஆர்.ரகுமான். இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ‘மா துஜே சலாம் என்ற இசை ஆல்பம் தயாரித்தார். ‘வந்தே மாதரம் என்ற பாடல் சர்வதேச அளவில் வரவேற்பை பெற்றது. இது ரசிகர்கள் மனதில் அவருக்கு தனி இடத்தை பெற்றுத் தந்தது. தற்போது புதிய இசை ஆல்பம் தயாரிக்க முடிவு செய்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது: மா துஜே சலாம் இசை ஆல்பம் தயாரித்து 15 வருடம் ஆகிவிட்டது. இது என்னுடைய முதல் தனி ஆல்பம்.

இன்னொரு முறை அதுபோல் ஒரு ஆல்பம் என்னால் தயாரிக்க முடியாது. என்னுடைய இடைவிடாத பணிக்கு மத்தியில் மற்றொரு ஆல்பம் தயாரிப்பது சவாலானது. ஆனாலும் இப்போது அதற்கான நேரம் வந்திருக்கிறது. இவ்வாறு ஏ.ஆர். ரகுமான் கூறினார். ‘மா துஜே சலாம் ஆல்பம் இந்திய சுதந்திர தினத்தின் கோல்டன் ஜூப்ளியன்று வெளியிடப்பட்டது. தேசபக்தியை வலியுறுத்தும் ஆல்பமாக அது அமைந்தது. ‘வந்தே மாதரம்தான் இதுவரை இந்தியாவில் வெளியான சினிமா அல்லாத இசை ஆல்பத்தில் அதிக விற்பனை ஆனது என்று இசை உலகில் கூறப்படுகிறது.

Comments