Thursday,22nd of November 2012
சென்னை::ரஜினி பிறந்தநாளான 12-12-12 அன்று கார்த்தியின் அலெக்ஸ் பாண்டியன் ஆடியோ வெளியாகிறது.
கார்த்தி, அனுஷ்கா, சந்தானம் நடித்திருக்கும் அலெக்ஸ் பாண்டியன் தீபாவளிக்கு வெளிவருவதாக இருந்து பொங்கலுக்கு ரிலீஸை மாற்றி வைத்தனர். சுராஜ் இந்த ஆக்சன் படத்தை இயக்கியுள்ளார். தேவி ஸ்ரீபிரசாத் இசை.
இதன் இசை வெளியீட்டு விழா 12-12-12 அன்று ரஜினியின் பிறந்தநாள் அன்று நடக்கிறது. 12-12-12 என்பது அபூர்வமான நாள். இப்படியொரு தேதி அமைவது நூறாண்டுக்கு ஒருமுறைதான். இதே தேதியில் கோச்சடையானை வெளியிடுவதாக இருந்தனர். துரதிர்ஷ்டவசமாக ஆடியோவைக்கூட வெளியிட முடியாத நிலை.
ரஜினியின் மூன்று முகம் படத்தில் வரும் புகழ்பெற்ற அலெக்ஸ் பாண்டியன் கதாபாத்திரத்தின் பெயரைதான் கார்த்தி படத்துக்கும் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment