1 வருடம் ஓய்வில் இருந்த மனோரமா நடித்தார்!!!

Saturday,17th of November 2012
சென்னை::ஒரு வருடத்துக்கு பிறகு மனோரமா ஷூட்டிங்கில் கலந்து கொண்டார். சூர்யா படத்துக்காக அவர் நடித்த காட்சி படமாக்கப்பட்டது என்றார் இயக்குனர் ஹரி.1500 படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தவர் மனோரமா. மூட்டு வலி, தவறி விழுந்ததில் தலையில் ரத்த கட்டு, மூச்சு திணறல் போன்ற நோயால் அவதிப்பட்டார். இதற்காக அறுவை சிகிச்சையும் நடந்தது. இதையடுத்து கடந்த 1 வருடமாக வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். கடைசியாக அவர் ‘பொன்னர் சங்கர்’ என்ற படத்தில் நடித்தார். தற்போது  குணம் அடைந்தார்.

இதையடுத்து சூர்யா நடிக்க ஹரி இயக்கும் ‘சிங்கம் 2’ படத்தில் நடித்தார். அவர் நடித்த காட்சி சென்னை தி.நகரில் உள்ள பங்களாவில் படமாக்கப்பட்டது. இதுபற்றி ஹரி கூறும்போது,‘உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நேரத்திலேயே ஆச்சி (மனோரமா) யிடம் சிங்கம் 2 படத்தில் நீங்கள் நடிக்கிறீர்கள். முதல்பாகத்தில் ஏற்ற வேடமே ஏற்கிறீர்கள். நிச்சயம் குணம் அடைந்து ஷூட்டிங் வருவீர்கள் என்றேன். அதன்படி அவர் குணம் அடைந்தார். அவர் நடித்த காட்சி படமாக்கப்பட்டது. குணம் அடைந்தபிறகு முதல் முறையாக எங்கள் ஷூட்டிங்கில் பங்கேற்றார். அவரை பட யூனிட்டே கரவொலி எழுப்பி வரவேற்றது. வழக்கம்போல் அவர் தனது காட்சிகளை மிக எளிதாக நடித்து முடித்தார். அடுத்த வருடம் படம் ரிலீஸ் ஆகிறது’ என்றார்.

Comments