Thursday,11th of October 2012
சென்னை::இந்தி படத்தில் நடிக்க ஓகே சொன்ன சரிகா, அப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க மறுத்துவிட்டார். கமல்ஹாசனை பிரிந்த பின் மும்பையில் வசித்து வருகிறார் சரிகா. இவரது மகள் ஸ்ருதி ஹாசன் தமிழ், இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். மற்றொரு மகள் அக்ஷரா உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் சரிகாவை மீண்டும் நடிக்க கேட்டபோது மறுத்துவந்தார்.
இடையில் அந்த முடிவை மாற்றிக்கொண்டார். இந்தியில் பேஜா ஃப்ரை, பர்சானியா படங்களில் நடித்தார். இப்போது சொஸைட்டி என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே தமிழ், இந்தியில் விக்ரம் நடிக்கும் டேவிட் என்ற படத்தில் அவரை நடிக்க கேட்டார் இயக்குனர் பிஜய் நம்பியார். முதலில் நடிக்க மறுத்தார். கதையை கேட்டுவிட்டு பிடித்திருந்தால் நடியுங்கள் என்றார் இயக்குனர். இதையடுத்து தனது கதாபாத்திரம் பற்றி கேட்டார். அது பிடித்துவிடவே நடிக்க ஒப்புக்கொண்டார்.
ஆனால் தமிழ் ரீமேக்கில் நடிக்க மறுத்துவிட்டார். இதுபற்றி இயக்குனர் பிஜாய் கூறும்போது, தமிழ், இந்தியில் விக்ரம் நடிக்கும் டேவிட் படத்தில் ஸ்பெஷல் நடன காட்சியொன்றில் சரிகாவிடம் நடிக்க கேட்டபோது ஏற்க மறுத்தார். ஸ்கிரிப்ட் கேட்டபிறகு ஒப்புக்கொண்டார். அவர் நடித்தகாட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டது. ஆனால் தமிழில் அவரது காட்சிகள் இடம்பெறாது. கோலிவுட் பிரபல ஹீரோயின் ஒருவர் நடிக்க உள்ளார். அவர் யார் என்பதை பிறகு அறிவிப்பேன் என்றார்.
Comments
Post a Comment