Sunday,7th of October 2012
சென்னை::சமீபகாலமாக மேல்தட்டு ஹீரோக்கள் நடித்த படங்கள் இரண்டு வாரங்கள் ஹவுஸ்புல்லாக ஓடுவது என்பதே பெரிய சாதனையாகி விட்டது. அந்த அளவுக்கு படங்கள் ஓடும் நாட்கள் குறைந்து வருகிறது. என்றாலும், சில ஹீரோக்கள் தங்கள் படங்கள் 50 நாள் ஓடியது, 100 நாள் ஓடியது என்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறார்கள். அதற்காக தியேட்டரில் கூட்டமே இல்லாதபோதும் சொந்த காசில் தியேட்டருக்கு வாடகை கொடுத்து படத்தை ஓட வைக்கிறார்கள். இதுதான் நடைமுறையில் உள்ளது.
இந்த நிலையில், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தான் நடித்த நான் படம் 50 நாட்கள் ஓடிவிட்டதாக மார்தட்டுகிறார். நான் நடித்த முதல் படமே ரசிகர்களின் அமோக ஆதரவோடு 50 நாட்கள் ஓடி வசூல் சாதனை புரிந்து விட்டதாக சொல்கிறார். அதோடு ரசிகர்கள் கொடுத்த ஆதரவை தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியாக அடுத்து திருடன், சலீம் என இரண்டு படங்களில் கமிட்டாகியிருப்பவர், இனி வருடத்துக்கு குறைந்தது 3 படங்களிலாவது நடிக்க வேண்டும் என்று திட்டமிட்டிருப்பதாக சொல்கிறார். மேலும், வசூல் ரீதியாக நான் படத்தை மாதிரி எனது ஒவ்வொரு படங்களையும் சாதனை புரிய வைப்பேன் என்கிறார்.
ஆனால் இதைக்கேட்டு, இவர் நடித்த நான் படம் பல தியேட்டர்களில் ஈ ஆடிக்கொண்டிருந்த கதை இவருக்கு தெரியாது போலும் என்று சில கோலிவுட் நபர்கள் நையாண்டி செய்கிறார்கள்
Comments
Post a Comment