மாற்றான் படம் இன்று உலகமெங்கும் பெரும் ஆரவாரத்துடன் வெளியாகியுள்ளது!!!

Friday,12th of October 2012
சென்னை::மாற்றான் படம் இன்று உலகமெங்கும் பெரும் ஆரவாரத்துடன் வெளியாகியுள்ளது. 'படம் எப்படி இருக்கிறது?' சினிமா ரசிகர்கள் இருவர் சந்தித்துக் கொண்டால் கேட்கும் முதல் கேள்வி இதுதான்.
படத்தின் முதல் காட்சி முடிந்துள்ள நிலையில் படம் குறித்த ஃபீட்பேக் கிடைக்க ஆரம்பித்துள்ளது.
பார்த்த ரசிகர்கள் பலருக்கும் படத்தின் கதை, எடுக்கப்பட்ட விதம், படத்தின் வேகம் போன்றவற்றில் பல்வேறு கருத்துகள் இருந்தாலும், அனைவரின் ஒருமித்த கருத்து: 'சூர்யா பிரமாதப்படுத்திட்டார்!'
படத்தின் முதல் பாதி முழுக்க ஒட்டிப் பிறந்த இரட்டையராக நடித்துள்ள சூர்யா, இடைவேளைக்குப் பிறகுதான் தனித்தனி சூர்யாவாக வருகிறார்.
இரண்டு சூர்யாக்கள், அதுவும் ஒருவரோடு ஒருவர் ஒட்டிக் கொண்டே சண்டை போடுவதும், காதல் வயப்படுவதும் என தமிழ் சினிமாவில் இதுவரை பார்க்காத பரிமாணத்தை சூர்யா வெளிப்படுத்தியுள்ளதாக ரசிகர்கள் பாராட்ட ஆரம்பித்துள்ளனர்.
இடைவேளையே 1.15 மணிநேரம் என்பதால் கொஞ்சம் நீளத்தைக் குறைத்திருக்கலாம் என்பது இன்னும் சிலரின் கருத்து.
இன்று திரையிடப்பட்ட அனைத்து இடங்களிலும் ஹவுஸ்புல் போர்டுடன் ஆரம்பமாகியுள்ளது மாற்றான்
படம் சராசரிக்கு சற்று மேல் என்று கருத்து சொல்பவர்கள் கூட, சூர்யாவுக்கு 100-க்கு 100 மார்க் போட்டிருப்பது, இந்தப் படம் சூர்யாவுக்காக பாக்ஸ் ஆபீஸில் நின்றுவிடும் என்பதை உணர்த்துவதாக கோலிவுட் நம்புகிறது.

Comments