சினிமா விழாக்களிலும் பொது நிகழ்ச்சிகளிலும் நடிகைகள் பாவாடை தாவணி, சேலை உடுத்தி பங்கேற்பு!

Tuesday,30th of October 2012
சென்னை::சினிமா விழாக்களிலும் பொது நிகழ்ச்சிகளிலும் நடிகைகள் பாவாடை தாவணி, சேலை உடுத்தி பங்கேற்க துவங்கியுள்ளனர். கவர்ச்சி ஆடை மோகம் மறைகிறது.

ஸ்ரேயா கவர்ச்சி ஆடை உடுத்தி சினிமா நிகழ்ச்சிக்கு வந்ததை கண்டித்து போலீசில் புகார் அளித்த சம்பவம் கடந்த காலங்களில் நடந்துள்ளது. நமீதாவும் கவர்ச்சி ஆடை உடுத்தியே நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். புது நடிகைகளும் உடம்பை காட்டியபடி அரைகுறை ஆடையுடன் வருகிறார்கள்.

ஆனால் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சிகளில் நடிகைகளை பாவாடை தாவணியில் பார்க்க முடிகிறது. தெலுங்கு நடிகர் மோகன்பாபு மகளும், நடிகையுமான லட்சுமி மஞ்சு தமிழ், தெலுங்கில் ‘மறந்தேன் மன்னித்தேன்’ என்ற படத்தை தயாரிக்கிறார். இதில் ஆதி, டாப்சி ஜோடியாக நடிக்கின்றனர். இப்படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழா வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது. இதில் டாப்சியும், லட்சுமி மஞ்சுவும் பாவாடை தாவணியில் வந்து பார்வையாளர்களை கவர்ந்தனர்.

இதுபோல் ஜெயம் ரவி, நீதுசந்திரா ஜோடியாக நடிக்கும் ‘ஆதிபகவன்’ பட நிகழ்ச்சி ஒன்று கடந்த வாரம் வடபழனியில் நடந்தபோது நீது சந்திரா சேலை உடுத்தி வந்தார். விழாவில் பேசிய கவிஞர் அறிவுமதி சேலை உடுத்தி வந்ததற்காக நீது சந்திராவுக்கு நன்றி என்று கூறினார்.
27-7-12_findyour_INNER_468x60.gif

Comments