கோடம்பாக்கத்தில் ஹீரோயின் பிரச்சனை எழுந்தால் அஞ்சலிதான் அஞ்சால் அலுப்பு மருந்து;ஒன்பதுல குரு - அஞ்சலி என்ற ஆபத்பாந்தவர்!!!
Thursday,18th of October 2012
சென்னை::கோடம்பாக்கத்தில் ஹீரோயின் பிரச்சனை எழுந்தால் அஞ்சலிதான் அஞ்சால் அலுப்பு மருந்து. தெலுங்கில் மகேஷ்பாபு, வெங்கடேஷ் இருவரும் தம்பி, அண்ணன்களாக நடிக்கும் படத்தில் வெங்கடேஷுக்கு ஜோடியாகி, மகேஷ்பாபுவின் அண்ணியாக மாட்டோம் என்று முன்னணிகள் எல்லாம் ஓட்டம் பிடிக்க அஞ்சலிதான் ஆட்டத்தை தொடர வைத்தார். இப்போது அஞ்சலி மகேஷின் அண்ணி.
விஷாலின் மத கஜ ராஜா வாய்ப்பை தாப்ஸி தட்டிக் கழிக்க அங்கேயும் முட்டுக் கொடுத்தவர் அஞ்சலி. இப்படி இன்ஸ்டெண்ட் ஹீரோயினாக வளைய வருகிறவர் குருவுக்கும் கருணை காட்டியிருக்கிறார்.
பி.டி.செல்வகுமார் இயக்கும் ஒன்பதுல குரு படத்தில் வினய் ஜோடியாக ஸ்ரேயா நடிப்பார் என்று ஸ்ரேயாவுக்கே தெரியாத ஒரு நியூஸை தட்டிவிட்டனர். எனக்கு குருவையும் தெரியாது சனியையும் தெரியாது என்று லண்டன் செல்லும் அவசரத்துக்கிடையிலும் ஸ்ரேயா ஆட்டையை கலைக்க, தற்போது அஞ்சலியை ஹீரோயினாக்கியிருக்கிறார் பி.டி. ஆர்.
இந்தப் படத்தில் ஜீவா கெஸ்ட் ரோலில் தலைகாட்டுவார் என்றொரு பிட் நியூஸும் அலைகிறது.

Comments
Post a Comment