Monday,29th of October 2012
சென்னை::தனுஷின் தயாரிப்பில் உருவாகி வரும் எதிர்நீச்சல் படத்தில், தனுஷ் இரண்டு பாடல்களை எழுதியுள்ளார்.
தனுஷின் தயாரிப்பில், அவரது நண்பர் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் எதிர்நீச்சல். இப்படத்தை வெற்றிமாறனிடம் அசோசியேட்டாக இருந்த ஆர்.எஸ். துரை செந்தில்குமார் இயக்குகிறார்.
கொலைவெறி பாடல் மூலம் புகழ்பெற்றுள்ள தனுஷ், தற்போது மீண்டும் பாடல் வரிகளை எழுதியுள்ளார். இப்படத்துக்கு தனுஷின் மற்றொரு நண்பர் அனிருத் இசையமைக்கிறார்.
கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றை துரை செந்தில்குமாரே கவனித்துக் கொள்ள, படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments
Post a Comment