Friday,19th of October 2012
சென்னை::சென்னை சிட்டிக்குள் எங்கு கேமரா வைத்தாலும் செலவும் சரி, சிக்கல்களும் சரி கழுத்தை நெரித்துவிடும். இதனால் இப்போதெல்லாம் மும்பைக்கு டிக்கெட் போட்டுவிடுகிறார்கள்.
துப்பாக்கி படத்தின் கதைக்களமே மும்பை. மும்பை தமிழனாக வருகிறாராம் விஜய். இதனால் பெரும்பகுதி படப்பிடிப்பு மும்பையில் நடந்தது. அடுத்து அஜீத் படம். விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்துக்கும் முதலில் மும்பைக்குதான் சென்றனர். மங்காத்தாவும் இங்குதான் ஷூட் செய்யப்பட்டது.
தற்போது சேட்டை டீமும் மும்பையில் முகாமிட்டுள்ளது. சேட்டையின் கதைக்களம் மும்பை. இன்டோர் காட்சிகளை சென்னையில் எடுத்துவிட்டு வெளிப்புற காட்சிகளை மும்பையில் ஷூட் செய்கிறார்கள். இங்குதான் அதிக நாள் படப்பிடிப்பு நடக்கயிருக்கிறது.
இவர்களைத் தொடர்ந்து மும்பை செல்லவிருப்பது யான் டீம். ரவி.கே.சந்திரன் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் யான் படத்தின் பெரும்பாலான காட்சிகளை மும்பையில் எடுக்கயிருக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு டிசம்பர் தொடக்கத்தில் ஆரம்பிக்கிறது. மும்பைதான் லொகேஷன். ஒரு மாதம் இங்கேயே படப்பிடிப்பு நடத்தவிருக்கிறார்கள்.
இன்னும் பல படங்களும் மும்பைக்கு கிளம்பத் தயாராகி வருகிறது. மும்பையை மையமாக வைத்து கதை பண்ணுவதுதான் இதற்கு முக்கிய காரணம் என்கிறார்கள்.
Comments
Post a Comment