Wednesday,31st of October 2012
சென்னை::எமியான இங்கிலீசு நடிகை பிரமாண்ட இயக்குனரு படத்துல நடிக்கிறாரு. சீனால பாட்டு சீன் படமாக்கினாங்களாம். இந்த சீனை பத்தி டுவிட்டர்ல நடிகை எழுதிட்டாராம்... இதை படிச்சிட்டு இயக்கம் கடுப்பாயிட்டாராம்... படம் சம்பந்தமா என் பர்மிஷன் இல்லாம எந்த தகவலையும் வெளியே சொல்லக்கூடாதுன்னு நடிகையை லெப்ட் ரைட் வாங்கிட்டாராம்...
வேல்டு ஹீரோவும், பெல் இயக்கமும் 25 வருஷத்துக்கு பிறகு இணையப்போறதா தகவல் வெளியாச்சாம்... இதுபத்தி ரெண்டுபேரும் பேச¤னாங்களாம். அந்த பேச்ச பத்தி ரெண்டுபேருமே வெளில சொல்றதில்லன்னு முடிவு பண்ணிருக்காங்களாம். ஆனாலும் இவங்க மூலமாவே மேட்டர் வெளியே கசியுதாம்... இது எல்லாமே பரபரப்புக்குத்தான், ரெண்டு பேரும் எப்போவும் ஒண்ணு சேரமாட்டாங்கன்னு இண்டஸ்ட்ரிகாரங்க பேசிக்கிறாங்களாம்...
ஆர்யமான ஹீரோவையும் அவரோட ஜோடி சேர்ற ஹீரோயினயும் லிங்க் பண்ணி கிசுகிசு கிளம்புறது வாடிக்கையாம்... இது பத்தி அவர் கிட்ட கேட்டாலும் டென்ஷனாகாம கூலா பதில் சொல்வாராம். ஆனா இரண்டாவது முறையா ஜோடி சேந்திருக்கற நயன ஹீரோயினோட சுத்தறீங்களாமேனு லேட்டஸ்ட் கிசுகிசு பத்தி கேட்டா மட்டும் ஹீரோ உர்ராயிடுறாராம்... வழக்கமா கிசுகிசுக்கு கவலப்படாம மத்த ஹீரோக்களையும் கிண்டலடிச்சி தொங்கல்ல விட்ட ஆர்யமான ஹீரோவுக்கு லேட்டஸ்ட் கிசுகிசு மட்டும் கோபத்த வரவழைக்குது. அது ஏன்னு கோடம்பாக்க ஆட்கள் கேக்குறாங்களாம்...
ஹீரோவா நடிச்சப்போ நவரச ஆக்டர் இயக்கத்துக்கும், தயாரிப்புக்கும் நெறய தண்ணி காட்டினாராம்... இப்ப அவரது வாரிசு படத்துல அறிமுகமாகுறாரு. ‘டாடி மாதிரி லந்து பண்ணாம இருந்தா நீ பெரிய நடிகரா ஆயிடலாம்Õனு சிலர் அட்வைஸ் பண்ணியிருக்காங்களாம். அவரும் அத காதுல வாங்கி மனசுல வச்சிக்கிட்டாராம். இதுக்கிடைல வாரிசோட கால்ஷீட் கேட்டு நெறய தயாரிப்புங்க டாடிய ரவுண்டு கட்றாங்களாம். ‘கண்டிப்பா பண்ணிடுவோம், கால்ஷீட் கொடுத்திடுவோம்Õனு எல்லார்கிட்டேயும் டாடி சொல்றாராம். வாரிசை கொஞ்சம் பாக்குறோமேன்னு தயாரிப்புங்க கேட்டா, பெல் இயக்கம் தடை போட்டு இருக்கிறதால வாரிசை பார்க்கவிடாம டாடி நடிகரு தடுக்குறாராம்...
அனுஷ்கமான ஹீரோயின் வழக்கமா ஷூட்டிங் முடிஞ்சதும் கூட ஒர்க் பண்ணின மேக்கப் மேன் உள்ளிட்டவங்களுக்கு கிப்ட் தருவாராம்... சமீபத்துல மேக்கப் மேன் விவகாரத்துல சங்கத்துக்காரங்க பிரச்னை பண்ணதால மனசொடிஞ்சிட்டாராம். செல்வ இயக்கம் படத்துல நடிச்சி முடிச்சப்ப¤றகு வழக்கமா தர்ற கிப்ட் யாருக்கும் வாங்கி தரலயாம். இதால மேக்கப் மேன் உள்ளிட்ட ஊழியருங்க ஏமாந்துட்டாங்களாம்...
விரல் நடிகர், த்ரி நடிகர்னு போட்டி நடிகர்கள்கூட ஜோடி போட்ட ரிச்சான ஹீரோயின் எதிர்பார்ப்பு டமாலாயிடுச்சாம் வாய்ப்பு வர்ற மாதிரி வந்து வேற ஹீரோயினுக்கு மாறிடுதாம். கோலிவுட்ல் டமாலானாலும் டோலிவுட் கைகொடுக்குதாம். அத டவலப் பண்ண கிளாமர் கோதாவுல இறங்கிட்டாராம். இதனால தன்னோட மார்க்கெட் நிலவரம் டாப்புக்கு போகும்னு நம்பிட்டிருக்காராம்...
Comments
Post a Comment