பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் யாஷ் சோப்ரா மரணம்!!!

Monday,22nd of October 2012
மும்பை::மூத்த பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் யாஷ் சோப்ரா மும்பையில் இன்று மரணம் அடைந்தார். 80 வயதான யாஷ் சோப்ரா டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக கடந்த சனிக்கிழமை மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் புதன்கிழமை தகவல்கள் வெளிவந்தன. இந்நிலையில் யாஷ் சோப்ரா இன்று திடீரென மரணம் அடைந்துள்ளார். அவருக்கு மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர்.

யாஷ் சோப்ரா தயாரிப்பில் இதுவரை 21 படங்கள் வெளிவந்துள்ளன. யாஷ் தயாரிப்பில், ஷாருக்கான், கேத்ரினா கைப் மற்றும் அனுஷ்கா சர்மா நடிப்பில் தற்போது தயாராகி வரும் ‘ஜப் ஹை ஜான்’ படம் தீபாவளி அன்று ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments