Wednesday,17th of October 2012
சென்னை::வடிவேலு உள்ளிட்ட முக்கிய காமெடி நடிகர்கள் கவிழ்ந்ததையடுத்து சந்தானம் உச்சத்தில் பறந்து கொண்டிருக்கிறார். அவரது கால்சீட்டுக்காக முன்னணி ஹீரோக்களே காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஏன் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரே,
சந்தானத்தின் கால்சீட் வேண்டும் என்பதற்காக ஏற்கனவே நிர்ணயித்த ஐ படப்பிடிப்பை இரண்டு நாட்களுக்கு தள்ளி வைத்தார். அந்த அளவுக்கு சந்தானம் தங்களுக்கு வேண்டும் என்று முன்னணி இயக்குனர்களே நினைக்கிறார்கள். இதை தனக்கு சாதகமாக்கிக்கொள்ளும் சந்தானம், தற்போது தான் நடிக்கும் படங்களில் தனக்கும் ஒரு ஜோடி வேண்டும் என்று கேட்டு வருகிறார்.
காமெடியனுககு எதற்கு ஜோடி என்று யாராவது குதர்க்கமாக பேசினால், நானே நக்கல் பார்ட்டி, எங்கிட்டே குதர்க்கமா? என்று உடனே ரிப்பீட்டு கொடுக்கும் சந்தானம், எனக்கு ஜோடி வேண்டும். அதற்காக கதையை மாற்றுவீர்களோ? சதையை மாற்றுவீர்களோ? எனக்குத் தெரியாது. என் கால்சீட் வேண்டுமென்றால், என் வழிக்கு வாருங்கள். இல்லையேல் போய்க்கொண்டேயிருங்கள் என்று நெத்தியடியாக பேசுகிறார். இந்த விஷயம் கேள்விப்பட்ட இயக்குனர்கள், முன்கூட்டிய அவருக்கேற்ப காமெடி தயார் செய்வதோடு, ஒரு ஜோடி நடிகையையும் ஓ.கே பண்ணி விட்டே சந்தானத்திடம் கதை சொல்ல தயாராகி வருகிறார்கள்
Comments
Post a Comment