படத்திற்காக விஜய் வெயிட்டிங்!!!

Saturday,20th of October 2012
சென்னை::விஜய், காஜல் அகர்வால் ஜோடியாக நடித்திருக்கும் துப்பாக்கி படம் தீபாவளிக்கு ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டு, ரிலீஸுக்கான வேலைகளும் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன. படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளிலும், ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சிகளிலும் துப்பாக்கி படக்குழு கவனம் செலுத்தி வருகிறது.

 துப்பாக்கி ரிலீஸாகி வெற்றியடையும் என்ற நம்பிக்கையுடன் துப்பாக்கி
படப்பிடிப்பு முடிவதற்கு முன்பே விஜய் தனது அடுத்த படம் இயக்குனர் விஜய்யுடன் என அறிவித்திருந்தார். இயக்குனநர் விஜய்யும் தன் படத்திற்கான திரைக்கதை, மற்ற நடிகர்கள் என அடுத்தகட்ட பணிகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார்.

இயக்குனர் விஜய் தன் படத்திற்கு ‘தலைவன்’ என்ற பெயர் வைக்க முடிவெடுத்தார். ஆனால் அந்த பெயரை வேறு ஒருவர் பதிவு செய்துவிட்டதால் வேறு பெயர் தேடிக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் நடிகர் விஜய் இயக்குனர் விஜய்யிடம் ’கொஞ்ச நாள் பொறுங்கள்’ என்று கூறியதாக தெரிகிறது. போக்கிரி படத்திற்கு முன்பு வரை விஜய் நடித்த படங்கள் அவ்வளவாக ஓடாததால் தெலுங்கு படமான போக்கிரியின் ரீமேக்கில் நடித்து ஒரு வெற்றிப் படத்தை கொடுத்தார். 

இன்னும் சில நாட்களில் பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் பவன் கல்யாண் நடிக்கும் படம் ரிலீசாகவிருக்கிறது. அந்த படத்திற்கு மக்களிடமிருந்து வரும் வரவேற்பை பார்த்துவிட்டு அதன் பிறகு எந்த படத்தில் நடிப்பது என முடிவு செய்யலாம் என இருக்கிறாராம் விஜய். அதனால் இயக்குனர் விஜய்யின் படவேலைகள் தற்போதைக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. 

Comments