Thursday,18th of October 2012
சென்னை::தொடர்ந்து மாணவி வேடத்தில் நடிப்பது போரடிக்கவில்லை என்றார் ஓவியா. களவாணி படத்தில் அறிமுகமானவர் ஓவியா. இதில் விமல் ஜோடியாக நடித்த இவர் பள்ளி மாணவி வேடம் ஏற்றிருந்தார். இதையடுத்து சில்லுனு ஒரு சந்திப்பு என்ற படத்தில் மீண்டும் விமல் ஜோடியாகவும் பள்ளி மாணவியாகவும் நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: மீண்டும் மாணவியாக நடிக்க வந்துவிட்டேன். கோலிவுட்டில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து ஹிட்டானால் தொடர்ந்து அதே வேடங்கள் வருவது வழக்கம்.
களவாணியில் மாணவி வேடம் ஹிட்டானதையடுத்து அடுத்தடுத்த படங்களில் அதேபோன்று நிறைய வேடங்கள் வருகிறது. ஆனால் அது எனக்கு போர் அடிக்கவில்லை. ஆனால் இந்த வேடத்தோடு நின்றுவிட மாட்டேன். கவர்ச்சியாக நடித்த கலகலப்பு படமும் எனக்குபேர் பெற்றுத்தந்தது. கவர்ச்சி வேடங்களிலும் தொடர்ந்து நடிப்பேன். அதேபோல் சோலோ ஹீரோயினாகத்தான் நடிப்பேன் என்றும் அடம் பிடிக்கமாட்டேன். டபுள் ஹீரோயின் படங்களில் நடித்தாலும் எனது கதாபாத்திரத்தில் என் பெயரை தக்க வைத்துக்கொள்வேன்.

Comments
Post a Comment