கார்த்தி ஜோடியாக நடிக்க இலியானா மறுப்பு!!!

Friday,12th of October 2012
சென்னை::கார்த்தி ஜோடியாக நடிக்க மறுத்தார் இலியானா. கார்த்தி நடித்துள்ள ‘அலெக்ஸ் பாண்டியன்’ திரைக்கு வரவுள்ளது. இதையடுத்து வெங்கட் பிரபு இயக்கும் ‘பிரியாணி’ என்ற படத்தில் கார்த்தி நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் ஆம்பூரில் தொடங்கியது. பிரியாணிக்கு பேமஸான ஊரில் இப்படத்தின் ஷூட்டிங்கை தொடங்கியதாக வெங்கட் பிரபு தெரிவித்தார். இப்படத்தில் கார்த்தி ஜோடியாக ரிச்சா கங்கோபாத்யாய் நடிப்பதாக இருந்தது. ஆனால் ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பே அவர் மாற்றப்பட்டார். இதையடுத்து ஹீரோயின் தேடும் பணி நடைபெற்று வந்தது. இலியானாவை நடிக்க வைக்க எண்ணி அவரிடம் கால்ஷீட் கேட்டார் இயக்குனர். ஆனால் அவர் நடிக்க மறுத்துவிட்டார். இதுபற்றி இலியானா தரப்பில் கூறுகையில்,‘பர்பி இந்தி படத்தில் இலியானா நடித்தார். அப்படம் பெரிய ஹிட் ஆகியுள் ளது. இதையடுத்து அடுத்தடுத்து பாலிவுட் பட வாய்ப்பு வந்துக்கொண்டிருக்கிறது. பாலிவுட் படங்களுக்கு ஏற்ப தனது உடலை பல மடங்கு குறைத்து ஸ்லிம் ஆகி விட்டார். தனது 2வது படத்தில் சாஹித் கபூர் ஜோடியாக நடிக்கிறார். தென்னிந்திய படங்களில் அவர் இப்போதைக்கு கவனம் செலுத்தப்போவதில்லை. பாலிவுட்டில் தனக்கென தனி இடம் பிடிப்பதில் கவனமாக இருக்கிறார். எனவே இப்போதைக்கு தென்னிந்திய படத்தில் நடிக்க மாட்டார்’ என்றனர். இதையடுத்து கார்த்தி ஜோடியாக நயன் தாரா அல்லது மற்றொரு பிரபல மும்பை நடிகை யாராவது ஒருவர் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் வெங்கட் பிரபு.

Comments