சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் படத்தின் வெளியீடு மேலும் தள்ளிப் போகிறது!!!

Saturday,13th of October 2012
சென்னை::சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் படத்தின் வெளியீடு மேலும் தள்ளிப் போகிறது

ரஜினியின் பிறந்த நாளான 12.12.12-ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இன்னும் முடிவடையாமல் தொடர்வதால், படத்தை பொங்கலுக்கு வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

படத்தின் தயாரிப்பாளர் டாக்டர் முரளி மனோகர் இதுகுறித்து கூறுகையில், "கோச்சடையான் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் இன்னும் முடியவில்லை. அந்தப் பணிகள் முடிவதைப் பொறுத்துதான் ரிலீஸ் தேதியை அறிவிக்க வேண்டும். அடுத்த இரு வாரங்களில் அதுகுறித்த இறுதி அறிவிப்பை வெளியிடுவோம்," என்று கூறியுள்ளார்.

இந்தியாவின் முதல் முழுநீள 3டி மோஷன் கேப்சரிங் படம் என்ற பெருமையோடு வருகிறது கோச்சடையான்.

படத்தின் பாடல்களை அக்டோபரில் வெளியிடத் திட்டமிட்டிருந்தனர். இதுவும் தள்ளிப் போகுமா என்பது அடுத்த வாரம் தெரிந்துவிடும்!

Comments