Sunday,7th of October 2012
சென்னை::பில்லி, சூனிய பாதிப்பிலிருந்து விடுபட நடத்தப்பட்ட சிறப்பு பூஜையில் பங்கேற்றார் சமந்தா. ஆந்திராவில் வசிக்கும் கேரள மந்திரவாதி டி.எஸ்.வினீத் பட். நடிகர்கள், நடிகைகள், அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள் மத்தியில் பிரபலம். தீய சக்திகளின் ஆதிக்கம் இருந்தால் அதை சிறப்பு பூஜைகள் நடத்தி சரி செய்வாராம். சமீபத்தில் இவரது உதவியை நாடினார் சமந்தா. ‘பாணா காத்தாடிÕ படத்தில் அறிமுகமான சமந்தா, ‘நான் ஈÕ பட வெற்றிக்கு பிறகு உச்சத்துக்கு சென்றார். மணிரத்னம், ஷங்கர், கவுதம் மேனன் படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். ஆனால் திடீரென்று தோல் அலர்ஜியால் பாதிக்கப்பட்டார். படங்களில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. மணிரத்னம், ஷங்கர் படங்களிலிருந்து விலகினார். சமந்தாவுக்கு தீய சக்தியால் பாதிப்பு ஏற்பட்டது என்று கூறப்பட்டது. இந்நிலையில் வினீத் பற்றி கேள்விப்பட்டு அவர் நடத்திய சிறப்பு பூஜையில் பங்கேற்று இருக்கிறார் சமந்தா. பாலகிருஷ்ணா உள்ளிட்ட டோலிவுட் நடிகர்கள் 20 பேர் வினீத்தை சந்தித்து சிறப்பு பூஜைகள் நடத்தி உள்ளார்கள். 10 ஆயிரம் ரூபாய் முதல் 1 கோடி வரை இந்த பூஜைக்கான கட்டணமாக அவர் வசூலிக்கிறாராம். இதுபற்றி வினீத் கூறும்போது, Ô‘பிரபலங்கள் மற்றும் ஏழை எளியவர்கள் மீது தீயசக்தி பாதிப்பு இருந்தால் அதை சிறப்பு பூஜைகள் மூலம் சரி செய்கிறேன். அந்த தீய சக்தியை நான் தாங்கிக்கொள்வதால் என் உடல் பாதிக்கிறது. தாங்கும் சக்தியை பெருக்கிக்கொள்வதற்காகவே பணம் வாங்குகிறேன்ÕÕ என்றார். மலையாள நடிகர்கள் சிலரும் இவரை சந்தித்து பரிகார பூஜை நடத்தி இருக்கின்றனர்.
Comments
Post a Comment