சிம்பு படத்திற்கு அனிருத் இசை!!!

Sunday,21st of October 2012
சென்னை::தமிழ் திரையுலகில் சிம்பு படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார் என்ற செய்தி தான் ஹாட் டாக்.

அனிருத் இசையமைத்த '3' படத்தின் பாடல்களுக்கு இளைஞர்கள் மத்தியில் பிரம்மாண்ட வரவேற்பு இருந்தது. குறிப்பாக WHY THIS KOLAVERI என்ற பாடல் உலகம் எங்கும் பிரபலமானது.

ரஜினியின் மைத்துனர் ரவி ராகவேந்தரின் மகன் தான் அனிருத். பாடல்களுக்காக மட்டுமன்றி சமீபத்தில் இணையத்தில் கூட பரபரப்பாக பேசப்பட்டார். காரணம், அனிருத், ஆண்ட்ரியா புகைப்படங்கள் இணையத்தினை சூடேற்றியது.

இந்நிலையில், சிம்பு 'மன்மதன் 2' படத்தினை இயக்க திட்டமிட்டு இருக்கிறார். முதல் படத்தில் தனுஷுடன் இணைந்த அனிருத், இம்முறை சிம்புவுடன் இணைந்து இருக்கிறார்.  'மன்மதன் 2' படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பதாக பேசப்பட்டது. தற்போது அதற்கு பதில் அனிருத் பெயர் இடம்பெற்று இருக்கிறது.

இச்செய்தி வெளியானதில் இருந்து சிம்பு தரப்போ, அனிருத் தரப்போ இச்செய்தியினை மறுக்கவில்லை என்பதால் இக்கூட்டணி இணைவது உறுதியாகி இருப்பதாக கூறுகிறார்கள் கோலிவுட்டில்.

தனுஷிற்கு ஏதாவது கெஸ்ட் ரோல் உண்டா சிம்பு சார்...?

Comments