Friday,12th of October 2012
சென்னை::விஜயின் 'துப்பாக்கி' படத்திற்கு பெரும் முட்டுக்கட்டையாக இருந்த 'கள்ளத்துப்பாக்கி' படம் துப்பாக்கி வெளியாகும் தீபாவளி தினத்தன்றே வெளியாகிறது.
கமல்ஹாசனின் உதவியாளராக இருந்த கே.சி.ரவிதேவன் தாரித்திருக்கும் இப்படத்தில் முழுக்க முழுக்க புதுமுகங்கள் தான் நடித்திருக்கிறார்கள். படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களுக்கும் ஒத்திகை கொடுக்கப்பட்டு பிறகு படப்பிடிப்பை நடத்தியிருக்கும் இப்படத்தின் இயக்குநர் லோகியாஸ், படத்தைப் பற்றி கூறுகையில், "இன்றைய சினிமாவுக்கு சவால்விடும் வகையில் கள்ளத்துப்பாக்கி படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான காட்சிகளை இன்டெர்கட் (Intercut) முறையிலேயே சொல்லியிருக்கிறோம். மேலும் எடிட்டர் மற்றும் கலரிஸ்ட்களையே மிரளவைக்கும் அளவுக்கு அதிக ஷாட்களை இப்படத்திற்காக எடுக்கப்பட்டுள்ளது." என்றார்.
Comments
Post a Comment