பார்ட்டிகள் எனக்கு பிடிக்காத கலாசாரம். அவற்றில் நான் பங்கேற்பது இல்லை - சுனைனா!!!

Sunday,28th of October 2012
சென்னை::பொதுவாக நடிகர், நடிகைகள் இரவு விருந்துகளில் பங்கேற்பதை வழக்கமாக வைத்துள்ளனர். மும்பை திரையுலகில் இந்த கலாசாரம் வேரூன்றி விட்டது. அந்த பழக்கம் தமிழ் பட உலகிலும் பரவி வருகிறது. இதுபோன்ற விருந்துகளில் அத்துமீறல், அடிதடி தகராறுகள் போன்றவையும் நடப்பது உண்டு.

இத்தகு விருந்து ஒன்றில் தான் தனது கையை பிடித்து இழுத்து தகாதமுறையில் நடந்ததாக சக நடிகர் மீது நடிகை சோனா புகார் செய்தார்.

தெலுங்கு நடிகர் மனோஜ், மஞ்சுவும் ‘மங்காத்தா’ படத்தில் நடித்த மகத்தும் இரவு பார்ட்டியில்தான் சண்டை போட்டுக் கொண்டனர். திரிஷாவை ஒரு விருந்தில் சிலர் தொல்லை செய்ததாகவும் கிசுகிசு பரவியது. இந்த விருந்தை தான் வெறுப்பதாக சுனைனா கூறினார்.

பார்ட்டிகள் எனக்கு பிடிக்காத கலாசாரம். அவற்றில் நான் பங்கேற்பது இல்லை. மற்றவர்களுக்கு பார்ட்டி கொடுக்கும் பழக்கமும் எனக்கு கிடையாது என்றார் அவர்.

Comments