Thursday,11th of October 2012
சென்னை::* பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடிக்கும் ‘கும்கி படம் இம்மாதம் 19ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இப்படத்தில் யானை ஒன்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.
* ‘அட்டை கத்தி படத்தில் நடித்த தினேஷ், அப்பட நிறுவனம் தயாரிக்கும் மற்றொரு படத்தில் நடிக்கிறார்.
* சிறுவயதிலேயே பாலிவுட் படங்களில் நடித்து வந்த ஹன்சிகாவுக்கு சொந்தமாக படம் தயாரிக்க வேண்டும் என்று ஆசையாம். அந்த ஆசையால்தான் இப்போது பட நிறுவனம் தொடங்கி இருக்கிறாராம்.
* ‘நான் படத்துக்கு பிறகு 3 படங்களில் நடிக்க உள்ள இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, அந்த படங்களில் புதிய இசை அமைப்பாளர்களை அறிமுகப்படுத்த உள்ளாராம்.
* குடும்பத்தோடு ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா சென்றிருக்கும் ஜீவாவை விரைவில் திரும்பிவந்து ‘நீதானே என் பொன் வசந்தம் படத்தின் பேட்ச் ஒர்க் காட்சிகளை முடித்துகொடுக்க கேட்டிருக்கிறாராம் கவுதம் மேனன்.
Comments
Post a Comment