Tuesday,30th of October 2012
சென்னை::புதிய படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ளும் முன்பு ஹீரோக்களுடன் நெருக்கமான காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று நயன்தாரா புது கண்டிஷன் போடுகிறார். தமிழ், தெலுங்கு படங்களில் நடித்திருக்கும் நயன்தாரா கவர்ச்சியாக நடிக்க தயக்கம் காட்டியதில்லை. தமிழில் அவர் நடித்த ‘பில்லா’ படத்தில் நீச்சல் உடை அணிந்தும் நடித்தார். இந்நிலையில் பிரபுதேவாவுடன் அவருக்கு காதல் மலர்ந்தது. இதையடுத்து படங்களில் நடிப்பதை நிறுத்தினார். வேகமாக வளர்ந்த காதல், அதே வேகத்தில் முறிந்தது. இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இதனால், மீண்டும் படங்களில் நடிக்கிறார் நயன்தாரா. தமிழ், தெலுங்கில் உருவாகும் ‘ஆங்காரம்’, விஷ்ணுவர்தன் இயக்க அஜீத் நடிக்கும் படம், ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கும் படம் போன்றவற்றில் நடித்து வருகிறார். அவரிடம் ஸ்கிரிப்ட் சொல்ல வரும் இயக்குனர்கள் கவர்ச்சியாக நடிக்க கேட்கின்றனர். ஆனால் அதை நயன்தாரா ஏற்க மறுக்கிறார். கதை கேட்பதற்கு முன்பே இரண்டு நிபந்தனைகளை விதிக்கிறார். ‘கவர்ச்சி பதுமையாக நடிக்க மாட்டேன், ஹீரோக்களுடன் நெருக்கமான காட்சிகளில் நடிக்க மாட்டேன்’ என்பதே அந்த நிபந்தனைகள். நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன் என்றும் அவர் உறுதியாக கூறி வருகிறாராம்.
Comments
Post a Comment