சென்னை பாக்ஸ் ஆபிஸ்!!!

Tuesday,30th of October 2012
சென்னை::

5. திருத்தணி
பேரரசு, பரத் கூட்டணியின் இந்த பட்டாசு ஆளில்லாத தீவில் காதில்லாதவர்கள் மத்தியில் வெடித்த கதையாகியிருக்கிறது. சென்ற வார இறுதியில் 1.2 லட்சத்தையும், வார நாட்களில் 1.8 லட்சத்தையும் வசூலித்த இப்படம் இதுவரை சென்னையில் ஏறக்குறைய 7 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது. அதாவது இது பத்து நாள் வசூல்.

4. சுந்தரபாண்டியன
அடுத்த ர‌ஜினியாகும் முயற்சியில் சசிகுமார் நடித்த படம் 7 வாரங்கள் ஆன நிலையிலும் ஸடெடியாக இருக்கிறது. சென்ற வார இறுதியில் இதன் வசூல் 1.5 லட்சம். வார நாட்களில் 1.7 லட்சம். இதுவரை மொத்தமாக 6.6 கோடிகள்.

3. இங்கிலீஷ் விங்கிலீஷ
நான்கு வாரங்கள் ஆன நிலையில் மயிலு நடித்த படம் இன்னமும் 3 வது இடத்தில். வார இறுதி வசூல் 3.33 லட்சங்கள், வார நாட்களில் 3.5 லட்சங்கள். இதுவரை சென்னையில் வசூல் 73.8 லட்சங்கள்.

2. பீட்ச
வெளியான முதல் மூன்று தினங்களில் அதாவது முதல் வார இறுதியில் 29 லட்சங்கள் வசூலித்த இப்படம் இரண்டாவது வார இறுதியில் சாதித்திருப்பது 73.4 லட்சங்கள். இதுதான் ஜனங்களுக்குப் பிடித்த படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு (தங்கர் சார் நல்லா பார்த்துக்குங்க). வார நாட்களில் வசூல் 77 லட்சங்கள். மொத்தமாக இதுவரை 1.8 கோடி.

1. மாற்றான
இரட்டையர்கள் இன்னமும் முதலிடத்தில். சென்ற வார இறுதியில் 74.4 லட்சங்களையும், வார நாட்களில் 85.6 லட்சங்களையும் வசூலித்துள்ளது மாற்றான். இதுவரை சென்னை வசூல் 6.5 கோடிகள்.

Comments