கேமரா முன்பு வெட்கப்பட்டால் குட்பை சொல்லிவிடுவார்கள் : ஸ்ரீதேவி பேட்டி!!!

Wednesday, 3rd of October 2012
சென்னை::கேமரா முன் வெட்கப்பட்டால் மக்கள் குட் பை சொல்லிவிடுவார்கள் என்றார் ஸ்ரீதேவி. இது பற்றி ஸ்ரீதேவி கூறியதாவது: ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிப்பது ரிஸ்க் என்கிறார்கள். நான் அப்படி நினைக்கவில்லை. ‘இங்லிஷ் விங்லிஷ்“ கதை எனக்கு பிடித்திருந்தது. இந்த கதாபாத்திரத்துடன் நான் ஒத்துப்போனேன். படத்தில் வருவதுபோல் எனது மகள்களும் என்னை அவ்வப்போது ஜாலியாக கிண்டல் செய்வார்கள். என்னை குழந்தைபோல் கவனித்துக்கொள்வார் போனிகபூர். ‘தொடர்ந்து படங்களில் நடிப்பீர்களா?“ என்கிறார்கள். தற்போது, நடித்திருக்கும் படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பை அனுபவித்துக்கொண்டிருக்கிறேன். கேமரா முன் வெட்கப்பட்டால் மக்கள் குட் பை சொல்லிவிடுவார்கள். கேமரா முன் நடிப்பதற்கு எப்போதும் ஆர்வமாக இருப்பேன். ஏற்ற கேரக்டராகவே மாறிவிடுவேன். வீட்டை பொறுத்தவரை எனது கணவர் என்னை ஜோக்கர் என்றுதான் அழைப்பார். காரணம் நிறைய ஜோக் சொல்வேன். குழந்தைகளுடனும் கலகலப்பாக பேசி சிரிக்க வைப்பேன். என் வீட்டில் நான் தான் பாஸ். சூழலைப்பொறுத்து இது மாறும். போனிகபூரை (கணவர்) பொறுத்தவரை எனது கருத்துக்கு மதிப்பு கொடுப்பார். அதுபோல் நானும் அவரது சொல்லை கேட்பேன். முன்னணி நடிகையாக இருந்தபோது நான் திருமணம் செய்துகொண்டதுபற்றி கேட்கிறார்கள். அந்த வாய்ப்பை நானே தேர்வு செய்துகொண்டேன். நமக்கு என்ன தேவையோ அதை அடைவது நம் கையில்தான் இருக்கிறது என்பதில் நம்பிக்கை உடையவள் நான். நடிப்பிலிருந்து இல்லறத்துக்கு வந்த இடைவெளி சந்தோஷ மாக இருந்தது. அம்மா என்ற ஸ்தானத்தை அளித்தது. வாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் ரசிப்பதுடன் எனது குழந்தைகளை நல்ல முறையில் வளர்த்திருக்கிறேன். நடிப்பு என்று வரும்போது அதில் மட்டும்தான் கவனம் செலுத்தி இருக்கிறேன். இவ்வாறு ஸ்ரீதேவி கூறினார்.

Comments