லீக்கான நடிகையின் சீக்ரெட்!!!

Wednesday,10th of October 2012
சென்னை::அலை ஓயாத நடிகர் தன்னோட மூத்த வாரிச மணியான இயக்கம் மூலமா அறிமுகப்படுத்துறாரு.  இதுக்கிடைல அவரோட இளைய வாரிசுக்கும் வாய்ப்பு தேடி வருதாம். அக்னி ஸ்டார் படத்த ரீமேக் பண்றதா ஒரு இயக்கம் வந்து கால்ஷீட் கேட்டாராம். அந்த படத்தெல்லாம் உங்களால எடுக்க முடியாதுன்னு இளயவாரிசு நடிக்கறதுக்கு ஓயாத நடிகரு, பர்மிஷன் தரலயாம். ஆனாலும் இயக்கம் முயற்சிய கைவிடாம அலைஞ்சிட்டிருக்காராம்...

யாரோ சூனியம் வெச்சதாலதான் உடம்பு பாதிச்சிடுச்சுன்னு சொல்லி சமந்த நடிகை மந்திரவாதிகிட்ட போனாரு. இந்த விஷயத்த சீக்ரெட்டா வெச்சிக்க சொல்லி மந்திரவாதிகிட்ட சொன்னாராம். ஆனா எப்படியோ விஷயம் லீக் ஆகி மீடியாவுக்கு தெரிஞ்சிடுச்சாம். யாரு சொல்லி மேட்டர் லீக் ஆச்சுன்னு விசாரிச்சப்போ, மந்திரவாதிக்கு தட்சணைய ஒரு பட நிறுவனம்தான் கொடுத்துச்சாம். ஷூட்டிங்கிற்கு தேதி கொடுக்கணும்னா, அந்த மந்திரவாதிக்கு செட்டில் பண்ணிடுங்கன்னு நடிகை உத்தரவு போட்டாராம். அதுல அந்த நிறுவனம் தட்சணைய கொடுத்ததாம். இந்த மேட்டர் பட யூனிட்டாருக்கு தெரியவர அப்படியே ஊரெல்லாம் பரவிடுச்சாம்...

அஜந்தமான பேர்ல படம் தயாரிக்க வந்தவரு திடீர்ன்னு இயக்கமாயிட்டாரு. படத்தோட ஒரிஜினல் இயக்குனர் பேர நீக்கிட்டு இவரே பேரை போட்டுக்கிட்டாருன்னு புகார் போச்சு. இதயடுத்து நீக்கின இயக்கத்தோட பேரயும் தன் பேரோடு சேத்துபோட்டுருக்காராம். கணக்கு பாக்குற வேலல சம்பாதிச்ச பணத்த படத்துல இன்வெஸ்ட் பண்ணவருக்கு இப்ப கையில ஒரு பைசா கூட மிஞ்சலையாம். இதனால படத்த வாங்குறதுக்கு யாராவது கம்பெனிகாருங்க வருவாங்களான்னு காத்துகிடக்கிறாராம்...

வசந்தமான பால இயக்கத்துக்கு ஹீரோக்கள் யாரும் கால்ஷீட் கொடுக்காம இருந்தாங்களாம்...மலையாள பக்கம் போகலாமான்னு கூட இயக்கம் யோசிச்சாராம். அந்த நேரத்துலதான் பாய்ஸ் ஹீரோ இயக்கத்தை சந்திச்சாராம். தானே முன்வந்து இயக்கத்துக்கு கால்ஷீட் கொடுத்தாராம்...  நல்ல இயக்குனர்களை மத்தவங்க மதிக்க கத்துக்கணும்னு சக ஹீரோக்களுக்கு பாய்ஸ் மறைமுகமா டோசும்
விட்டிருக்காராம்...

வாரண இயக்கம் இயக்குற பொன் ஈவ்னிங் படத்தோட ஷூட்டிங் முடிஞ்சதுன்னு பட யூனிட்டார் நெனச்சாங்களாம்...ஆனா இன்னும் சில சீனுங்க பாக்கி இருக்குன்னு இயக்கம் தரப்புலயிருந்து சொல்லி இருக்காங்களாம்.  முடிஞ்சதா நெனச்சோம். மறுபடியும் தொடர்கதையா இருக்கேன்னு நொந்துபோன டெக்னீஷியன்ஸ், அதையாவது சீக்கிரமா எடுத்து முடிங்கன்னு உதவி இயக்குனருங்ககிட்ட
புலம்புறாங்களாம்...

ஜாயின் அடிச்ச டபுள் ஆக்ஷன் கேரக்டர்ல நடிச்சிருக்க பிரகாச ஹீரோ, தல, பஞ்ச் நடிகர் ஃபேனா நடிச்சிருக்காராம்...  இந்த சீன டிரைலர்யும் போட்டுகாட்டி ரெண்டு ஹீரோ ஃபேன்சுங்க மத்திலயும் சலசலப்ப ஏற்படுத்திட்டாங்களாம். தன்னோட ஃபேன்ஸ தவிர மத்த ஹீரோக்கள் ஃபேன்ஸயும் கவர்றதுக்காக இப்படியொரு டெக்னிக்க யூஸ் பண்ணிருக்காங்களாம். ‘எதுஎப்படியோ ஃபேன்ஸுங்க மத்தில மோதல் வந்துடாம பாத்துக்கங்க‘னு சில பெரிசுங்க அட்வைஸ் கொடுத்திருக்காங்களாம்...

Comments