திறமைசாலிகளுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை : செல்வராகவன்!!!

Tuesday, 16th of October 2012
சென்னை::திறமைசாலிகளுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை என்றார் இயக்குனர் செல்வராகவன். இது பற்றி அவர் கூறியதாவது: கோலிவுட்டில் இப்போது ஆரோக்கியமற்ற சூழல் நிலவுகிறது. இதற்காக யார் மீதும் குற்றம் சொல்ல விரும்பவில்லை. நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லோருமே திறமை வாய்ந்தவர்களுக்கு வாய்ப்பு தர எண்ணுவதில்லை. பெரிய இயக்குனர்களையே நாடுகிறார்கள். இதே நிலை நீடித்தால் எதிர்காலத்தில் திறமையான ஒரு இளைய தலைமுறையை இழந்துவிடுவோம். இதற்கு ஒரு தீர்வு காண எண்ணினேன். சொந்தமாக படம் தயாரித்து அதில் புதிய நடிகர்கள், இயக்குனர்கள், இசை அமைப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு வாய்ப்பு தர உள்ளேன்.

யாருமே பரிசோதனையான படங்களை தயாரிக்க முன்வருவதில்லை. எனவே அதுபோன்ற படங்களை தயாரிக்க உள்ளேன். அடுத்த 2 வருடத்தில் 7 படங்கள் தயாரிக்க உள்ளேன். திறமை வாய்ந்தவர்கள் யாராக இருந்தாலும் மெயில் மூலம் என்னை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தேன். 2 மணி நேரத்துக்குள் 500 பேர் மனு செய்து விட்டார்கள். எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்து பதில் அளிப்பேன். தேர்வு செய்யும் ஸ்கிரிப்ட்டுக்கு ஏற்ப பட்ஜெட், ஷூட்டிங் நாள் அவகாசம் தருவேன்.

Comments