நடிகர் விஜய்யும் இயக்குநர் விஜய்யும் முதல் முறையாக புதிய படம் ஒன்றில் இணைகிறார்கள்:முதல் முறையாக விஜய் படத்துக்கு இசையமைக்கிறார் ஜிவி பிரகாஷ் குமார்!

Wednesday, 3rd of October 2012
சென்னை::முதல் முறையாக விஜய் படத்துக்கு இசையமைக்கிறார் ஜிவி பிரகாஷ் குமார்.
நடிகர் விஜய்யும் இயக்குநர் விஜய்யும் முதல் முறையாக புதிய படம் ஒன்றில் இணைகிறார்கள். இந்தப் படத்தை சந்திரபிரகாஷ் ஜெயின் தயாரிக்கிறார்.
தாண்டவம் பார்த்து ரொம்ப இம்ப்ரஸ் ஆகித்தான், கவுதம் மேனன் படத்தைக்கூட விட்டுவிட்டு இயக்குநர் விஜய் படத்துக்கு கால்ஷீட் கொடுத்திருந்தார் விஜய். ஆனால் தாண்டவம் படுத்துவிட்டது.
இருந்தாலும் கொடுத்த கமிட்மெண்டை மீறாமல், படத்தைக் தொடங்கச் சொல்லியிருக்கிறார் விஜய்.
இந்தப் படத்துக்கு இசையமைப்பது இயக்குநர் விஜய்யின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார். பொதுவாக தான் நடிக்கும் படங்களில் விஜய்யும் ஒரு பாடல் பாடுவது வழக்கம். இந்தப் படத்திலும் அவர் பாடுவார் என்றே தெரிகிறது.
எல்லாம் சரிதான்... இயக்குநர் விஜய்யும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமாரும் இந்தப் படத்தில் எல்லாமே ஒரிஜினலாக இருக்கும்படி பார்த்துக் கொண்டால் தேவையற்ற சர்ச்சையைத் தவிர்க்கலாம்.

Comments