கமலின் பிறந்தநாளான்று 'விஸ்வரூபம்' படத்தின் பாடல்கள் வெளியீடு!!!

Monday,15th of October 2012
சென்னை::கமல்ஹாசன் நடித்து இயக்கும் 'விஸ்வரூபம்' படத்தின் பாடல்கள் அவருடைய பிறந்தநாளான நவம்பர் 7ஆம் தேதி வெளியாகிறது.

கமல்ஹாசன் நடித்து, இயக்கி தயாரித்திருக்கும் 'விஸ்வரூபம்' தமிழ், தெலுங்கு, இந்திய ஆகிய மூன்று மொழிகளில் ஒரே சமயத்தில் வெளியாகிறது.

பல புதிய தொழில்நுட்பங்களுடன் உருவாகியிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் பெரும்பாலும் வெளிநாடுகளில் நடைபெற்றுள்ளது. படத்திற்கு தணிக்கை சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவை கமல்ஹாசனின் பிறந்தநாளான நவம்பர் 7ஆம் தேதி நத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பாடல் வெளியீட்டு விழா சென்னை, மதுரை, கோவை ஆகிய மூன்று நகரங்களில் ஒரே சமயத்தில் ரசிகர்களின் முன்னிலையில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

Comments