Sunday,14th of October 2012
சென்னை::அஜீத் ஜோடியாக நடித்த ஹீரோயின், நாடகங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். ‘காதல் மன்னன் படத்தில் அஜீத் ஜோடியாக நடித்தவர் மானு. இவர் தற்போது படங்களில் நடிப்பதைவிட்டு விட்டு மேடை நாடகங்களை சொந்தமாக தயாரித்து நடிக்கிறார். இது பற்றி அவர் கூறியதாவது:
‘பீஷ்மா தி கிராண்ட்சர் நாடகத்தை கடந்த ஆண்டு நடத்தினேன். இந்த நாடகத்தை டைரக்டர் கே.பாலசந்தர், ரஜினி நேரில் வந்து பார்த்து ரசித்தனர். இதையடுத்து ‘சகுனி என்ற நாடகம் நடத்த உள்ளேன். பிறகு ‘ஸ்திரி என்ற நாடகம் நடத்துகிறேன். இந்த மாத இறுதியில் நடக்கவுள்ள ‘சகுனியில் நான் நடிக்க உள்ளேன். சிங்கப்பூரில் உள்ள பிரபல நாடக குழுவினரும் இதில் பங்கேற்கிறார்கள்.
பாலசந்தர், விவேக் உள்ளிட்ட கோலிவுட் பிரபலங்கள் பலர் இந்நாடகத்துக்கு வரவுள்ளனர். நேரம் கிடைத்தால் தானும் வருவதாக தெரிவித்திருக்கிறார் ரஜினி. இந்த நாடகம் மூலம் வரும் நிதி கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் சிகிச்சைக்காக வழங்கப்பட உள்ளது. இவ்வாறு மானு கூறினார்.
Comments
Post a Comment