Thursday,11th of October 2012
சென்னை::தாடிக்கார டான்ஸ் மாஸ்டரை காதலிக்கும்போது கிளாமருக்கு குட்பை சொன்னாரு நயன நடிகை. இப்போ மாஸ்டரை பிரிஞ்சிட்டாரு. அதனால கொஞ்சம் கொஞ்சமா தனது பாலிசியை மாத்துறாராம்... ராண தெலுங்கு நடிகரோடு ஒரு படத்துல நடிக்கிறாரு. இதுல மழை பாட்டுல நடிகரோடு நெருங்கி கவர்ச்சியா நடிச்சிருககாராம்...
நாட்டாமை இயக்குனரு இந்தி பக்கம் போயிருக்காரு. கான் நடிகர்களை வச்சி சாமியான படத்தை ரீமேக் பண்ண பிளான் பண்ணினாரு. அது நடக்கல. கடைசியில மார்க்கெட் இழந்த தத் நடிகரை வச்சி படம் எடுத்துட்டு இருக்காரு. இதுக்கிடையே படத்துக்கு வச்ச டைட்டிலுக்கு அங்கே நாலு பேரு சொந்தம் கொண்டாடுறாங்களாம்... எல்லா மொழிலேயும் டைட்டில் பிரச்னை, பெரிய பிரச்னையா இருக்கேன்னு தலையில அடிச்சிக்கிட்ட இயக்கம், வேற தலைப்பு யோசிக்கிறாராம்...
பஞ்ச் ஹீரோவோட டாடி பத்தி சங்கத்துக்காரங்க கொஞ்சபேர் கோபமா பேசறாங்களாம்... ஆனாலும் யாராவது புதுசா படம் தொடங்குனா வரச்சொல்லி அழைப்பு விடுறாங்களாம். தன் மகன் நடிச்ச ‘கன் படத்தோட ஆடியோ ரிலீஸ் இருந்தப்பவும் வேற 2 பங்ஷ னுக்கு வரச்சொல்லி அழைப்பு வந்துச்சாம். போகலன்னா மறுபடியும் தப்பா பேசுவாங்கனு அந்த 2 பங்ஷன்லயும் முதல்ல கலந்துட்டு மகன் பங்கஷனுக்கு நிகழ்ச்சி முடியறப்போ டாடி வந்தாராம்... யாரையும் பகைச்சிக்க வேணாம்னு டாடிக்கு பஞ்ச் நடிகரு அட்வைசும் பண்ணிருக்காராம்...
Comments
Post a Comment