மும்பையில் செட்டிலா? பிரியா ஆனந்த் பதில்!!!

Wednesday,31st of October 2012
சென்னை::மும்பையில் செட்டிலாகிறாரா என்றதற்கு பதில் அளித்தார் பிரியா ஆனந்த். ‘இங்கிலிஷ் விங்கிலிஷ்’, ‘வாமனன்’, ‘புகைப்படம்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் பிரியா ஆனந்த். அவர் கூறியதாவது: இந்தியில் ஸ்ரீதேவியுடன் இங்கிலிஷ் விங்கிலிஷ் படத்தில் நடிப்பதற்கு முன்பே சில படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருந்தேன். இந்நிலையில்தான் ஸ்ரீதேவியுடன் நடிக்க வாய்ப்பு வந்தது. சிறுவயதில் இருந்தே நான் அவரது ரசிகை. உடனே ஒப்புக்கொண்டு நடித்தேன். பாலிவுட்டில் நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வருகிறது. சில தென்னிந்திய நடிகைகள் இருப்பதுபோல் நீங்களும் மும்பையில் குடியேறுவீர்களா? என்கிறார்கள்.

தற்போது எனது தாத்தா பாட்டியுடன் சென்னையில் வசிக்கிறேன். இந்தி படங்களில் நடிப்பதால் மும்பைக்கு செல்லும் யோசனை எதுவும் இல்லை. ‘கோ அன்டே கோட்டி’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறேன். த்ரில்லர் கதையான இது தமிழிலும் ரிலீஸ் ஆக உள்ளது. எனது பாட்டி மராட்டி. அப்பா பாதி தெலுங்கு, பாதி மராட்டி. எனது அம்மா தமிழ்பெண். என் குடும்பத்தை பொறுத்தவரை இந்திய ஒருமைப்பாட்டுக்கு உதாரணமாக கூறலாம். எனவே மராட்டிய பெண்ணாக நடிக்க வாய்ப்பு வரும்போதெல்லாம் குஷியாகிவிடுவேன். ‘இங்கிலிஷ் விங்கிலிஷ்’ படத்தில் மராட்டிய பெண்ணாக நடித்தேன். தற்போது ‘ரான்கிரிஸ்’ படத்திலும் மராட்டிய பெண்ணாக நடிக்கிறேன். இவ்வாறு பிரியா ஆனந்த் கூறினார்.

Comments