முன்னணி இயக்குனர்கள் மீது நம்பிக்கை இழந்த கோலிவுட் ஹீரோக்கள்!!!

Monday,22nd of October 2012
சென்னை::வளர்ந்து வந்த காலகட்டத்தில் முன்னணி இயக்குனர்கள், அறிமுக இயக்குனர்கள் என்ற பாரபட்சம் பார்க்காமல் நடித்து வந்த கோலிவுட் ஹீரோக்கள் சிலர் சமீபகாலமாக முன்னணி இயக்குனர்களின் படங்களில் மட்டுமே நடிப்பதில் முன்னுரிமை கொடுத்து வந்தனர்.அந்த வரிசையில் சூர்யா, விக்ரம், ஜீவா, விஷால் ஆகியோருக்கு முக்கிய இடம் உண்டு. குறிப்பாக, அறிமுக இயக்குனர்களிடம் துருவி துருவி கதை கேட்கும் இவர்கள், முன்னணி இயக்குனர்களிடம் கதையின் அவுட் லைனை மட்டுமே கேட்டு ஓ.கே செய்தனர். காரணம், அவர்கள் ஏற்கனவே ஹிட் படங்கள் கொடுத்ததால் ஏற்பட்ட அளவுகடந்த நம்பிக்கை.

அப்படி சூர்யா நம்பி நடித்த படங்கள் ரத்த சரித்திரம், மாற்றான் போன்ற படங்கள். அதேபோல் விக்ரம் ராஜபாட்டை, தாண்டவம் படங்களை அளவுக்கதிகமாக நம்பி மோசம் போனவர். அதேபோல் ஜீவா முகமூடி தன்னை எங்கோ கொண்டு போகப்போகிறது ஓவராக நம்பிக்கை வைத்தார் அதுவும் கவுத்து விட்டது. அடுத்தபடியாக விஷால் பிரபுதேவா இயக்கத்தில் நடித்த வெடி மீது நம்பிக்கை வைத்து சொந்த பணத்தை போட்டுகூட படத்தை இயக்கினார். ஆனால் பெரிய நஷ்டத்தை சந்தித்தார். இதன்காரணமாக கோடிகளை வாரி இறைத்த படாதிபதிகளும் கோவணம் கட்டும் ஆண்டியாக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதேநிலை நீடித்தால், தங்களது மார்க்கெட் அவுட்டாகி விடும் என்று நினைக்கும் மேற்படி ஹீரோக்கள், அடுத்தடுத்து நடிக்கப்போகும் படங்கள் விசயத்தில் எச்சரிக்கையாக செயல்படத் தொடங்கியுள்ளனர். அதாவது, முன்னணி டைரக்டர்களின் படங்கள்தான் என்றில்லாமல் நல்ல கதை கிடைத்தால் யார் இயக்கத்தில் வேண்டுமானாலும் நடிக்கலாம் என்ற மனநிலைக்கு வந்திருக்கிறார்கள்

Comments