Monday,29th of October 2012
சென்னை::மலையாள படங்களில் நடிக்க மறுத்தது உண்மைதான் என்றார் சுவாதி. இது பற்றி ‘சுப்ரமணியபுரம் பட ஹீரோயின் சுவாதி கூறியதாவது: சுப்பிரமணியபுரம் படத்துக்கு பிறகு மலையாள படங்களில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வந்தன. ஆனால் மொழி தெரியாத காரணத்தால் ஏற்கவில்லை. ஆனால் இயக்குனர் லிஜோ ‘ஆமென் படத்தில் நடிக்க கேட்டபோது மறுக்க முடியவில்லை. மலையாள கிறிஸ்தவ பெண்ணாக இதில் நடிப்பது ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. முண்டு கட்டி நடிப்பது புது அனுபவம். இந்த வார்த்தையை சரியாக சொல்வதற்கே எனக்கு ஒரு நாள் ஆனது. தமிழ், தெலுங்கு படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறேன். ‘சிட்டி ஆப் காட் என்ற மலையாள படத்தில் நடிக்க ஒரு வருடத்துக்கு முன்பே என்னிடம் லிஜோ கேட்டிருந்தார்.
ஆனால் ‘சுப்ரமணியபுரம் படத்தில் நடித்த அதே வேடம் போல் இருந்ததால் நடிக்கவில்லை. ‘ஆமென் படத்தில் நடிக்க கேட்டு என்னிடம் இயக்குனர் அணுகியபோது இதுவரை நான் ஏற்காத பாத்திரம் என்பதை தெளிவாக குறிப்பிட்டார். அவர் கொடுத்த ஊக்கத்தின்பேரில் நடிக்க ஒப்புக்கொண்டேன். மலையாள கலாசாரம் எனக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அங்குள்ளவர்கள் கடின உழைப்பாளிகள். இளைய மற்றும் புதிய திறமைசால¤கள் கொண்ட இண்டஸ்ட்ரி. அங்குள்ளவர்கள் என்னை எளிதாக அடையாளம் கண்டுகொண்டபோது ஆச்சர்யமாக இருந்தது. தொடர்ந்து மலையாள படங்களில் நடிப்பதுபற்றி ‘ஆமென் ரிலீஸ் வரவேற்பை பொறுத்து முடிவு செய்வேன்.

Comments
Post a Comment